Load Image
Advertisement

திராவிட மாடல் என்பது தீய்ந்து போன மாடல்: சீமான் கிண்டல்

Dravidian model is a rotten model: Seeman quips   திராவிட மாடல் என்பது தீய்ந்து போன மாடல்: சீமான் கிண்டல்
ADVERTISEMENT
சென்னை: திராவிட மாடல் என்பது தீஞ்சு போன மாடல் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தவறான ஆட்சி நடப்பதற்கு, அதை தேர்வு செய்த மக்களும் தான் காரணம். படித்தவர்கள் தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்; ஆனால், வர விட மாட்டார்கள்.

பிரச்னைகளை காலம் கடத்தவே, அரசு ஒவ்வொன்றுக்கும் குழு அமைக்கிறது. ராஜாவை விட உதயநிதிஸ்டாலின் பெரியவரா. ஸ்டாலின் மகன் என்பதை தவிர வேறு என்ன அவருக்கு தகுதி உள்ளது.திராவிட மாடல் என்பது தீஞ்சு போன மாடல். அன்று ஹிந்தி தெரியாது போடா என்றவர்கள், இன்று ஹிந்தி தெரியுமா வாடா என, ஐ.டி., பிரிவிற்கு தி.மு.க.,வில் ஆட்கள் எடுக்கின்றனர்.

காவிரி நதிநீர் பிரச்னையில், தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும் போது, ரயில் மறியல் செய்தது. ஆளும் கட்சியாக உள்ள போது மவுனமாக உள்ளது. 50 ஆண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் நாட்டை நாசமாக்கி விட்டது. என்னை பற்றி பேசவில்லை என்றால், தமிழக காங்., தலைவரை கட்சியில் வைத்திருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (19)

  • K.Ramakrishnan - chennai,இந்தியா

    இப்படி வயிறு எரிஞ்சே காலத்தை கழிச்சிட வேண்டியது தான்...

  • duruvasar - indraprastham,இந்தியா

    அழகிரியே இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கபோகிறோம் என கலகத்தில் இருக்கிறார். அவரை இப்படி பேசாதீங்க. ஸ்டாலின் சொல்றாரு இவர் ஆடராரு. கல்வி தந்தை பீட்டர் அல்போன்ஸ் ஒரு வாரியம் பதவி வாங்கிட்டு முரசொலியில் கட்டுரை மட்டும் எழுதுகிறார். இவரை ஸ்டாலின் தனது மவுத் ஸ்பீச்காக பணியமர்த்தியுள்ளார்.

  • magan - london,யுனைடெட் கிங்டம்

    Well said semaan sir keep go please destroy tha dravidian model bring back our tamil model

  • Sathyam - mysore,இந்தியா

    வடிவேல் காமெடி தான் "துபாய்ல ஷேக் தான் இருப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன் ஆனா தமிழ்நாட்டுல இந்த மாதிரி நிறைய கிராக் சுத்திகிட்டு இருக்கு

  • M Ramachandran - Chennai,இந்தியா

    தைரியமாக பேச ஒரு ஆள் தேவை. க்ரேக்ட்தானா கமண்ட்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்