Load Image
Advertisement

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலை அளிக்கின்றன: கவர்னர் ரவி

Social Justice: Tenkasi, Virudhunagar: Stories of oppressed communities are very disturbing: Governor Ravi  ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலை அளிக்கின்றன: கவர்னர் ரவி
ADVERTISEMENT
சென்னை: 'தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலை அளிக்கின்றன. சமூக நீதி பற்றிய பிரமாண்ட விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக அவை உள்ளன. என, கவர்னர் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கடந்த, 28, 29ம் தேதிகளில் கவர்னர் ரவி சுற்றுப்பயணம் செய்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், அழகான மற்றும் மறக்க முடியாத இரண்டு நாட்களை கழித்தேன்.

விவசாயிகள், விவசாய சங்கங்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், மரம், பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள், மண்பாண்ட கலைஞர்கள், கைவினை கலைஞர்கள், சிறு, குறு நடுத்தர நிறுவன சங்கங்கள், சூரியசக்தி துறை நிறுவன பிரதிநிதிகள், சமூக தலைவர்களை சந்தித்தேன்.

சிவசைலம் கோவிலில் மக்கள் நலனுக்காக வேண்டிக் கொண்டேன். நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த பூலித்தேவன், ஒண்டி வீரன், வெண்ணிக்காலாடி ஆகியோருக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினேன். காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். மக்களுக்கு இருக்கும் விருப்பங்கள் மற்றும் கவலைகள் பற்றிய நேரடியான அனுபவத்தை இந்த பயணம் எனக்கு வழங்கியது.

விவசாயிகள் அழுத்தத்தில் உள்ள போதும், ஆர்வமுள்ளவர்களாகவும், கைவினைக் கலைஞர்கள் கடுமையான தடைகளை எதிர்கொண்ட போதும், லட்சியம் மிக்கவர்களாகவும் உள்ளனர். சிறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்தை விரும்பினாலும், தடைகளால் அவை தேங்கியுள்ளன. முக்கிய தொழில்கள், தொழில்நுட்ப சவால்களை சந்தித்து வருகின்றன.

கிராமத்து இளைஞர்கள் இயல்பாகவே அறிவு ஜீவிகளாக உள்ளனர். முறையான தகுதிகள் இல்லாவிட்டாலும், அவர்களிடம் சரியான உந்துதலை ஏற்படுத்தினால், ஆக்கப்பூர்வம் மிகுந்தவர்களாக அவர்களால் திகழ முடியும்.

ஜாதிய பதற்றங்கள் மற்றும் சமூக பண்பாடுகளில், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலை அளிக்கின்றன. சமூக நீதி பற்றிய அதிகாரப்பூர்வ பிரமாண்ட விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக அவை உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (4)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  செய்வது எல்லாம் செய்து விட்டு நீலி கணீர் வடிக்கிறார் அது எல்லாம் கதையாம் அது கதை அல்ல நடந்த சம்பவம் பாதிக்க பட்ட மக்களின் அவளை நிலை இன்னும் நீடிக்கின்றது

  • ஆதவன் - ,

   திராவிடியா கும்பலுக்கு தமிழை பிழையின்றி எழுதவோ, படிக்கவோ தெரியாது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் அவர்களை வாக்கு வங்கியாக மட்டுமே வைத்திருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.

 • ஆரூர் ரங் -

  ஆணவக் கொலைகள் , வன்கொடுமைகளில் ஈடுபடும் சமூகங்கள் இடஒதுக்கீடு பட்டியலிலிருந்து வெளியேற்றப் படவேண்டும்🤥. தம் சாதியை உயர்வாகக் கருதி மற்றவர்களைத் தாழ்த்தி வாழும் ஆட்களுக்கு அரசு சலுகைகள் அளிப்பது சாதித் திமிரை அதிகரிக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement