காந்தி பிறந்த தினம்: நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி, கார்கே மரியாதை

மரியாதை
காந்திஜெயந்தியையொட்டி, டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா தலைவர் ஓம் பிர்லா, டில்லி கவர்னர் சக்சேனா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு
காந்தி பிறந்த தினத்திற்கு திரவுபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில் : நாட்டு நலனுக்காக காந்தியின் போதனைகளை பின்பற்றுவோம். காந்தியின் அடையாளமான உண்மை மற்றும் அஹிம்சை உலகிற்கே புதிய பாதையைக் காட்டியது. இவ்வாறு அந்த அறிக்கையில் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மஹாத்மா காந்தியின் சத்தியம் மற்றும் அஹிம்சை ஆகிய கொள்கைகள் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் வழிகாட்டியாக இருந்தன என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தியின் சிறப்பு நிகழ்வில், மஹாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவரது காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன.
காந்தியின் தாக்கம் உலகளாவியது, ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வை மேலும் வளர்க்க தூண்டுகிறது. அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்.
ஒவ்வொரு இளைஞனும் அவர் கனவு கண்ட மாற்றத்தின் முகவராக, ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் வகையில் அவரது எண்ணங்கள் உதவட்டும்.
மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (4)
தேசத்தின் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மிகவும் துக்ககரமான நாள் இன்று. நம் அருமை பெருந்தலைவர் காமராஜர் இயற்க்கை எய்திய நாள் இன்று. ஒருசில தலைவர்கள் போல் நாட்டுக்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டு சொந்த வாழிலேயும் ஒழுக்கம் கேட்டு வாழ்ந்துவிட்டு சரித்திரத்தில் பெயர் வாங்கி செல்லாமல், உண்மையாகவே தன்னால் முடிந்தவரை மக்களுக்காக உழைத்த உத்தமர் காமராஜர்
அகிம்சை இந்தியர்களின் சுவாச மூச்சு போன்றது, அதே சமயம் மத சகிப்புத்தன்மை என்பது இந்தியாவை உலக அரங்கில் மேலும் உயர்த்தியது ஜனநாயகம் என்ற சொல்.வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய நாட்டில் வரமாக உள்ளது.இந்த காந்தி ஜெயந்தியை நாம் மனதில் நிறுத்துவோம் அவர் வழியில் சிறந்த தேசம் காண்போம்.
இன்று டாஸ்மாக்கில் மூடியது அர்த்தமற்றது🤔.. காந்தியால் தனது முக்கிய சீடர் ஜவகர்லால் நேருவின் குடி சிகரெட் பழக்கத்தையே நிறுத்த முடியவில்லையாமே. ஒருநாள் கடையை மூடுவதால் குடிகாரர்கள் குடியையே மறந்து விடுவார்களா?