Load Image
Advertisement

பாலியல் தொல்லை தந்த பாதிரியார்; பெண் தற்கொலை முயற்சி

Priest who sexually harassed; A woman who tried to commit suicide  பாலியல் தொல்லை தந்த பாதிரியார்; பெண் தற்கொலை முயற்சி
ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் மங்களா குடியிருப்பில் வசிப்பவர் ஜெகன், 39. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். தச்சநல்லுாரில், சீயோனின் கோட்டை என்ற பெயரில் சர்ச் நடத்தி வந்தார்.

வழிபாட்டிற்கு வந்த, 39 வயது பெண்ணின் மொபைல் போன் எண்ணை பாதிரியார் வாங்கி இருந்தார். பெண்ணுக்கு கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை அறிந்த பாதிரியார், தினமும் மொபைல் போனில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மனமுடைந்த பெண், 40க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பாதிரியார் ஜெகனை தச்சநல்லுார் போலீசார் கைது செய்தனர்.

கடத்தல் நாடகமாடிய கல்லுாரி மாணவிசென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண், கோடம்பாக்கத்திலுள்ள மகளிர் கல்லுாரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை, கல்லுாரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற இவர், மிகவும் காலதாமதமாக வீடு திரும்பியுள்ளார். கோபமடைந்த பெற்றோர், தாமதத்திற்கான காரணம் கேட்டுள்ளனர்.

பயந்து போன மாணவி, தான் ஆட்டோவில் வழக்கம் போல கல்லுாரிக்குச் சென்ற போது, வழியில் ஆட்டோவை மறித்து ஏறிய மர்ம நபர் இருவர், மயக்க மருந்து கலந்த துணியால் முகத்தில் அழுத்தி மயங்க வைத்ததாக கூறியுள்ளார். நீண்ட நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்து பார்த்த போது, கடத்தல் கும்பல் சென்னை புறநகர் பகுதியில் தன்னை விட்டுச் சென்றதாகவும், அங்கிருந்து வீட்டிற்கு வர தாமதமானதாகவும், அழுதபடியே கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான மாணவியின் பெற்றோர், கோடம்பாக்கம் காவல் நிலையம் சென்று, சம்பவம் குறித்து புகார் அளித்தனர். தொடர் விசாரணையில், மாணவி சம்பவத்தன்று கல்லுாரிக்கு செல்லாமல், காதலனுடன் சுற்றியுள்ளார். இதை மறைக்க, பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடியது தெரிந்தது. இதையடுத்து, பெற்றோரிடம் உண்மையை கூறிய போலீசார், மாணவியை எச்சரித்து அனுப்பினர்.

வியாபாரியை வெட்டி ரூ.8 லட்சம் வழிப்பறிசென்னை, தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரகாஷ் பாபு, 47. இவர் தண்டையார்பேட்டை, வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் 'ரங்கநாத் ஸ்டீல்' என்ற பெயரில், இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

சாத்தாங்காட்டில் இரும்பு குடோன் வைத்துள்ளார்.இவர், நேற்று முன்தினம் இரவு மண்ணடியில் 'கலெக் ஷன்' பணம் 8 லட்சம் ரூபாயை வசூல் செய்து, தன் 'பஜாஜ் பல்சர்' பைக்கில் பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ., ரோடு வழியாக வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து இரு பைக்குகளில் வந்த நால்வர் கும்பல், பிரகாஷ் பாபு பைக்கில் மோதினர். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.

அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது வலது மற்றும் இடது கையை வெட்டி, 8 லட்ச ரூபாய் இருந்த பை மற்றும் 'ஆப்பிள் ஐபோன்' மற்றும் 'கூகுள் பிக்சல்' போனை பறித்து தப்பினர். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் பாபுவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து, தண்டையார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

'டம்மி' துப்பாக்கியால் மிரட்டல்; பெங்களூரு வாலிபர்கள் கைதுசேலம், கருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ், 33, சேலத்தில், பள்ளப்பட்டி, ஆலமரத்துக்காட்டில் டூ-வீலர் பட்டறை வைத்துள்ளார். இவரின் தொழில் கூட்டம் அருகில் பட்டறை நடத்தும் சந்தோஷ் என்பவரின் மூலம் பெங்களூருவை சேர்ந்த கார்த்திக், 25, என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இருவரிடையே பணம், கொடுக்கல் வாங்கல் இருந்தது.

இந்நிலையில் சுரேஷிடம், கார்த்திக் பணம் கேட்டார். அவர் தர மறுக்கவே, 'பட்டறையை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன்' என, மிரட்டினார். மேலும், நேற்று முன்தினம், கார்த்திக் உள்பட மூன்று பேர், சுரேஷ் பட்டறைக்கு வந்தனர். போலி துப்பாக்கி, கத்தியை காட்டி, பணம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவலின்படி, பள்ளப்பட்டி போலீசார் சென்றனர். அதற்குள் கார்த்திக் தப்பி விட அவருடன் வந்த பெங்களூருவை சேர்ந்த அருண், 30, அனேக், 28, பிடிபட்டனர். அவர்களிடம் இரும்பு டம்மி துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்து, கைது செய்தனர். கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

பா.ஜ., - ஐ.டி., நிர்வாகி கைதுநாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த, முத்துக்காளிப்பட்டி எஸ்.ஆர்.வி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ், 27; பா.ஜ., மாநில இளைஞரணி 'ஐ.டி., விங்க்' நிர்வாகி. கடந்த ஆக., 10ல், காங்., - எம்.பி., ராகுல் குறித்து, அவதுாறாக செய்தி வெளியிட்டதாக, கரூர் காங்., கட்சியினர், சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தனர். விசாரணை நடத்திய கரூர் சைபர் கிரைம் போலீசார், பிரவீன்ராஜை நேற்று காலை கைது செய்தனர்.

வங்கியில் வைத்த நகை மோசடி; அண்ணன் மீது தங்கை வழக்குசேலம், தாதகாப்பட்டி, திருச்சி பிரதான சாலையை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மகன் மனோஜ், 35; மகள் ஐஸ்வர்யா, 32. இவர்கள் பூர்வீக நிலத்தை கடந்த மே மாதம் விற்றனர். அதில் ஐஸ்வர்யாவுக்கு சொந்தமான, 12 லட்சம் ரூபாய், 25 சவரன் நகை, 2 கிலோ வெள்ளியை இருவரின் பெயரிலும், வங்கியில் மே, 18ல் கூட்டாக டிபாசிட் செய்யப்பட்டது.

இந்நிலையில், பணம், நகை, வெள்ளியை மனோஜ் எடுத்துக்கொண்டதால், ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தார். 'பணம், நகையை போலியாக கையெழுத்திட்டு அண்ணன் மனோஜ், அண்ணி தமிழ்செல்வி, 33, எடுத்துக் கொண்டனர். மீட்டுத்தர வேண்டும்' என அன்னதானப்பட்டி போலீசில் ஐஸ்வர்யா புகார் அளித்தார். மனோஜ், தமிழ்செல்வி மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

பைக்கை அடமானம் வைத்தவர் கொலைவிழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த அச்சரம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதாஸ் 38 கூலித் தொழிலாளி. திண்டிவனம் அடுத்த பழமுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாபு 32. இருவரும் நண்பர்கள். பாபு திருமணமாகி புதுச்சேரி கோரிமேடு காமராஜர் நகரில் வசிக்கிறார். 6 மாதங்களுக்கு முன் பாபு தன் பைக்கை அடமானம் வைத்து பணம் வாங்கித் தரும்படி முரளிதாசிடம் கேட்டார்.

முரளிதாஸ் தென்கோடிப்பாக்கத்தைச் சேர்ந்த நபரிடம் 11,000 ரூபாய்க்கு அடமானம் வைத்தார். அதில் 5000 ரூபாய் மட்டும் பாபுவிடம் கொடுத்து விட்டு மீதியுள்ள 6000 ரூபாயை தரவில்லை. இதற்கிடையில் 5000 ரூபாயை திருப்பிக் கொடுத்து பைக்கை மீட்டுத் தர முரளிதாசிடம் பாபு கூறினார். ஆனால் முரளிதாஸ் காலம் தாழ்த்தினார்.

தன் பைக்கை கூடுதல் தொகைக்கு அடமானம் வைத்ததோடு மீட்டு தருவதிலும் காலம் தாழ்த்தியதால் பாபு கடும் கோபம் அடைந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த நண்பர் ஜெகன் என்பவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை அச்சரம்பட்டு ஏரிக்கரையில் முரளிதாசை பாபு அரிவாளால் வெட்டினார். இதனால் புதுச்சேரி 'ஜிப்மர்' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முரளிதாஸ் நேற்று அதிகாலை இறந்தார். பாபு, ஜெகன் ஆகியோரை ஆரோவில் போலீசார் தேடி வருகின்றனர்.

150 பவுன் திருடிய ஆந்திர வாலிபர் கைதுஈரோடு, பழையபாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் துரைசாமி, 68, ஆடிட்டர்; இவரின் வீட்டில் கடந்த ஆக., 5ம் தேதி பீரோவில் இருந்த, 150 பவுன் தங்க, வைர நகை திருடு போனது. புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் திருடியவரை தேடி வந்தனர்.

பக்கத்து வீட்டின் 'சிசிடிவி' கேமரா பதிவில் சிக்கிய, நகை திருடிய ஆசாமியை பிடிக்க, ஆறு தனிப்படை அமைத்து, ஆந்திர மாநிலம், காமவரப்பு கோட்டை மண்டல், மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த அனில்குமார், 32, என்பவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 150 பவுன் நகையை மீட்டனர்.

இவர் மீது, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரியில், 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. பல வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததும் தெரிந்தது. திருட்டில் ஈடுபட்டவரை பிடிக்க 2000 'சிசிடிவி' கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், 3000 பழைய குற்றவாளிகளின் படங்களும் தனிப்படையினரால் ஆய்வு செய்யப்பட்டன

மணிப்பூர் மாணவர்கள் கொலை: 4 பேர் கைதுவடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த ஜூலையில் காணாமல் போன பிஜம் ஹேமன்ஜித், 20, மற்றும் ஹிஜாம் லிந்தோய்கம்பி, 17, ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவர்களான அவர்களின் கொலை நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாணவர்கள் கொலையில் தொடர்புடைய நான்கு பேரை நேற்று கைது செய்த துணை ராணுவப் படையினர், அவர்களை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்தனர். அவர்களுடன் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் 11 மற்றும் 9 வயது மகள்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இளைஞர் கொலையில் இரு சிறுவர்கள் கைதுபுதுடில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெல்கம் ஏரியாவை சேர்ந்தவர் காஷிப், 18. இவருக்கும், 15 வயதான இரண்டு சிறுவர்களுக்கும் இடையே, சிறிய பிரச்னைக்காக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. அப்போது காஷிப், 'ஸ்குரூ டிரைவரை' காட்டி, சிறுவர்கள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

உடனே சுதாரித்த சிறுவர்கள், காஷிப் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரை பறித்து அவரது நெஞ்சில் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த காஷிப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சிறுவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பஞ்சாபுக்கு ஹெராயின் கடத்திய இருவர் கைதுஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஜம்மு - ஸ்ரீநகர் தேசியநெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பஞ்சாபை சேர்ந்த வாகனம் சென்று கொண்டிருந்தது. போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். வாகனத்தில் இருந்த, 300 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்ததுடன் அதில் இருந்த இருவரை கைது செய்தனர்.வாசகர் கருத்து (7)

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்

  டே என்னடா இது, எதோ சும்மா மளிகை நடத்தினார், இஸ்திரி வண்டி நடத்தினார், கமிஷன் மண்டி நடத்தினார் மாதிரி, சர்ச் நடத்தினார் ன்னு போடுறீய இப்படி தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் கணக்கா அவனவன் திரு சபை அமைச்சு தசம பாக்க வரி வசூல் செஞ்சா... இந்து அற நிலைய துறை ய, சும்மா வெறும் அற நிலைய துறை ன்னு மாத்தி, அத்தினி திருச்சபை, வக்பு, மசூதி, தர்கா எல்லாத்தையும் அரசுடமை ஆக்கணும். அனைத்து மதத்தினரும் பாதிரி ஆகலாம், அனைத்து மதத்தினரும் இமாம் மவுல்வி ஆகலாம் ன்னு சட்டம் கொண்டு வரணும்.

 • Sathyam - mysore,இந்தியா

  உலகில் அதிக விபச்சார விகிதங்களைக் கொண்ட முதல் 10 நாடுகள்: 1. தாய்லாந்து (பௌத்த) 2. டென்மார்க் (கிறிஸ்தவம்) 3. இத்தாலியன் (கிறிஸ்தவன்) 4. ஜெர்மன் (கிறிஸ்தவன்) 5. பிரெஞ்சு (கிறிஸ்தவன்) 6. நார்வே (கிறிஸ்தவன்)7. பெல்ஜியம் (கிறிஸ்தவம்) 8. ஸ்பானிஷ் (கிறிஸ்தவம்) 9. யுனைடெட் கிங்டம் (கிறிஸ்தவம்) 10. பின்லாந்து (கிறிஸ்தவம்) , 10 நாடுகள் அதிக மதுபானம் உள்ள நாடுகள் உலகில் அடிமையாதல்: 1) மால்டோவா (கிறிஸ்தவ) 2) பெலாரஷ்யன் (கிறிஸ்தவ) 3) லிதுவேனியா (கிறிஸ்தவ) 4) ரஷ்யா (கிறிஸ்தவ) 5) செக் குடியரசு (கிறிஸ்துவர்)6) உக்ரேனியன் (கிறிஸ்தவர்) 7) அன்டோரா (கிறிஸ்தவர்) 8. ருமேனியன் (கிறிஸ்தவர்) 9) செர்பியன் (கிறிஸ்தவர்) 10) ஆஸ்திரேலியா (கிறிஸ்தவம்) , உலகில் அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகள்: 1. ஹோண்டுராஸ் (கிறிஸ்தவம்) 2. வெனிசுலா (கிறிஸ்தவம்) 3. பெலிஸ் (கிறிஸ்தவம்) 4. எல் சவடோர் (கிறிஸ்தவம்) 5. குவாத்தமாலா (கிறிஸ்தவம்) \6. தென்னாப்பிரிக்கா (கிறிஸ்துவர்) 7. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (கிறிஸ்தவர்) 8. பஹாமாஸ் (கிறிஸ்தவர்) 9. லெசோதோ (கிறிஸ்தவர்) 10. ஜமைக்கா (கிறிஸ்தவர்) , உலகின் மிகவும் ஆபத்தான கும்பல்களின் பெயர்கள்: 1. யாகுசா 2. அக்பெரோஸ் (கிறிஸ்தவர்கள்) 3. வா சிங் (கிறிஸ்தவர்கள்) 4. ஜமைக்கன் போஸ் (கிறிஸ்தவர்) 5. பிரைரோ (கிறிஸ்தவர்) 6. ஆரிய சகோதரத்துவம் (கிறிஸ்தவர்) 7. இரத்தம் (கிறிஸ்தவர்) 8. 18வது தெரு கும்பல் (கிறிஸ்தவர்) 9. முங்கிகி (கிறிஸ்தவர்)10. மாரா சல்வாருச்சா (கிறிஸ்தவர்), உலகில் போதைப்பொருள் விற்பனையாளர்களின் பெரிய பெயர்கள்:- 1. பாப்லோ எஸ்கோபார்-கொலம்பியா (கிறிஸ்தவர்) 2. அமடோ கரெல்லோ-கொலம்பியா (கிறிஸ்தவர்) 3. கார்லோஸ் லெஹ்டர்-ஜெர்மன் (கிறிஸ்தவர்) 4. Griselda Blanco-Colombia (Christian) 5. Joaquin Guzman-Mexico (Christian) 6. Rafael Caro- Mexico (Christian) ,உலகின் 10 பெரிய பயங்கரவாத அமைப்புகள்:-1. இஸ்லாமிய அரசு (ISIS) 2. அல் கொய்தா 3. தலிபான் 4. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் 5. போகோ ஹராம் 6. அல் நுஸ்ரா முன்னணி 7. ஹிஸ்புல்லாஹ் 8. ஹமாஸ் 9. குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) 10. கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகள், ஆனால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், வன்முறை மற்றும் கற்பழிப்புக்கு இந்து மதம் பொறுப்பேற்கப்படுகிறது. வெளிநாடு சென்று இந்தியாவை அவதூறாகப் பேசுபவர் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியுமா?

 • DVRR - Kolkata,இந்தியா

  பாதிரியார் ஒருக்காலும் தொல்லை தரமாட்டார் அவர் தன்னிடம் இருக்கும் விலை மிகுந்த உயிரணுவை உனக்கு பிரீயாக தர கூப்பிடுகின்றார் அவ்வளவு தானே. இதெல்லாம் பால் இயல் தொல்லை எப்படி ஆகமுடியும் (ஆண்/பெண்)பால் இயல்பாக தொலை தூரம் இல்லை என்று பொருள் கொள்ளுங்கள்

 • RAMESH - chennai,இந்தியா

  சாமியார்னாதான் நான் பொங்குவோம் . பாதிரியார்னா நாங்க பம்முவோம்

 • sridhar - Chennai,இந்தியா

  பாதிரிகள் அப்படி என்ன சாப்பிடுகிறார்கள் . குமரி , நெல்லை , தூத்துக்குடியில் ரொம்ப ஓவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement