Load Image
Advertisement

பாலியல் தொல்லை: பாதிரியார் கைது

Sexual harassment: Priest arrested   பாலியல் தொல்லை: பாதிரியார் கைது
ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் மங்களா குடியிருப்பில் வசிப்பவர் ஜெகன், 39. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். தச்சநல்லுாரில், அருணாச்சலம் என்பவரது இடத்தில், சீயோனின் கோட்டை என்ற பெயரில் சர்ச் நடத்தி வந்தார்.

வழிபாட்டிற்கு வந்த, 39 வயது பெண்ணின் மொபைல் போன் எண்ணை பாதிரியார் வாங்கி இருந்தார். பெண்ணுக்கு கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை அறிந்த பாதிரியார், தினமும் மொபைல் போனில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மனமுடைந்த பெண், 40க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பாதிரியார் ஜெகனை தச்சநல்லுார் போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து (15)

  • venugopal s -

    மூட நம்பிக்கைகள் உள்ளவர்களை ஏமாற்றும் போலி சாமியார்கள் எல்லா மதங்களிலும் நிறையவே இருக்கின்றனர்!

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    வெளி நாட்டுலேர்ந்து ஒரு பக்கம் எக்கச்சக்கப் பணம், மற்றொரு பக்கம் ஆட்சியாளர்கள் கனிவு இதெல்லாம் இருக்கச்சே இப்புடி தான் தாறுமாறா நடந்துக்குவாங்க, இதெல்லாம் சகஜமப்பா அப்புடீன்னு பேசிக்கிறாங்க.

  • raja - Cotonou,பெனின்

    இதோ ஆரமிச்சிட்டானிவோ லே ஆட்டத்தை...

  • Sridhar - Chennai ,இந்தியா

    Most of these fellows use churches only for these purposes

  • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

    இதுவே பெரும்பாலான மதத்தை சார்ந்தவர் செய்து இந்த கேவலமான காரியத்தை செய்து இருந்தால் இப்போது கம்யூனிஸ்ட்களும், திராவிட (முன்னேற்ற) கழகமும், விடுதலை சிறுத்தைகளும் இப்போது இருக்கிறார் போன்று சும்மா இருப்பார்களா? இதுதான் இவர்களது மதச்சார்பின்மையா (செகுரலிசம்). தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்க பட வேண்டும் அதில் பாகுபாடு கூடாது, இல்லையேல் இவைகளை அரசின் துறைகளும் நீதி துறையும் பார்த்து கொள்ளும் என ஒன்றிலுமே படாமல் இருக்க வேண்டும். இவர்களின் முகத்திரை மெல்ல மெல்ல கிழிந்து கொண்டு இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement