Load Image
Advertisement

மாலத்தீவுகள் அதிபராக மூயிஸ் தேர்வு: இந்தியாவின் முயற்சிக்கு பின்னடைவா?

Moose elected as Maldives president: setback for Indias bid?   மாலத்தீவுகள் அதிபராக மூயிஸ் தேர்வு: இந்தியாவின் முயற்சிக்கு பின்னடைவா?
ADVERTISEMENT
மாலே: மாலத்தீவுகள் அதிபர் தேர்தலில், சீனா ஆதரவு பெற்ற மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகமது மூயிஸ் வெற்றி பெற்றுள்ளார். இது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலிமையானவர் யார் என்ற போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், அதிபராக உள்ள இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் போட்டியிட்டனர்.

செப்.,ல் நடந்த தேர்தலில், யாருக்கும், 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் தேர்தல் நடந்தது. இதில், 53 சதவீத ஓட்டுகள் பெற்று மூயிஸ் வென்றார். சோலிஹ், 46 சதவீத ஓட்டுகளை பெற்றார்.

மக்கள் தேசிய காங்கிரசின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன், பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தலில் போட்டியிட அவருக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில்தான், மூயிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சரான இவர், மாலேயின் மேயராகவும் இருந்துள்ளார்.

சீனாவுக்கு ஆதரவாக, மக்கள் தேசிய காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில், மிகவும் வலுவான நாடு இந்தியாவா, சீனாவா என்ற போட்டி உள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

தற்போது அதிபராக உள்ள இப்ராஹிம் முகமது சோலிஹ், இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. மாலத்தீவுகளில், நம் கடற்படைக்கான தளம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அதிபர் தேர்தலில் வென்றுள்ள மூயிசுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (5)

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    இந்தியா எதுக்காக இந்த மாலதீவை காக்கவேண்டும். 1987 ல் இந்திய ராணுவம் உதவியதால் இந்த மாலத்தீவு இன்னும் இருக்கிறது. பங்களாதேஷ் இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும் நன்றி இல்லாத நயவஞ்சகம் இப்போது தலைவர்களாக இருப்பது அந்த அந்த நாட்டிற்கு தான் கேடு.

  • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

    சீனா பின் எந்த நாடு சென்றாலும் அது கடன் வலையில்சிக்க வேண்டும் பின்பு வட்டி கட்ட முடியாமல் நாட்டின் முக்கிய துறைமுக்கம் மற்றும் கடல் சார்ந்த இடங்களை நூறு வருட அடமானத்திற்கு கொடுத்தாக வேண்டும் மேலும் சீனாவில் தயாரிக்கும் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டும் கடைசி கட்டத்தில் அவர்கள் நினைக்கும் கட்சிதான் ஆளும் நிலைக்கு வரும்.

  • அப்புசாமி -

    என்ன இருந்தாலும் அது ஒரு முஸ்லிம்.மெஜாரிட்டி நாடு. அவிங்களுக்கும் ஆளும்.ப.ஜ வுக்கும் ஆகாது. தேர்தல் முடிவு எதிர்பார்த்ததே.

  • Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ

    சீனா கடன் தந்து மீளா துயரில் தள்ளும் ..இலங்கை பாகிஸ்தான் உதாரணம் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்