தி.மு.க., மாவட்ட செயலர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. இதில், 72 மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் மற்றும் 234 சட்டசபை தொகுதிகளின் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளை பரிமாறி விட்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட, 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் பெறுவது போன்ற வெற்றியை, நாடு முழுதும் அடைய வேண்டும்.
அதற்காகவே, 'இண்டியா' கூட்டணியை அமைத்துள்ளோம். தேசிய கட்சிகளும், பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும், வலிமையான மாநில கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்று உள்ளன.
பா.ஜ., மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது; இண்டியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நம் பொறுப்பும், கடமையும் அதிகமாகி உள்ளது.
கடும் எச்சரிக்கை
லோக்சபா தேர்தல் பணியை, ஆறு மாதத்திற்கு முன் நாம் துவக்கினோம். நம் வெற்றிக்கு அடித்தளமாக விளங்கக் கூடிய ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம். இதுவரை, மூன்று பயிற்சி பாசறை கூட்டங்கள், தேர்தல் சிறப்பு மாநாடுகளை போல நடந்துள்ளன.
அடுத்ததாக, திருவண்ணாமலையில் வடக்கு மண்டல பயிற்சி பாசறை கூட்டமும், சென்னை மண்டலத்தில் ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடைபெற உள்ளன.
இவற்றில், நாம் எடுத்து சொன்னதை செயல்படுத்தினாலே போதும்; முழுமையான வெற்றியை அடைந்து விடலாம்.
கடந்த லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட, 39 தொகுதிகளை வென்றோம் என்றால், நடக்க இருக்கும் தேர்தலில், 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். எந்த ஒரு தனிமனிதரையும் விட கட்சியும், கட்சி அடைய வேண்டிய வெற்றியும் தான் முக்கியம்.
மக்கள் நன்றாக இருக்கின்றனர். அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக உழையுங்கள். உழைப்பும், செயல்பாடும் தான் வெற்றியை பெற்று தரும். திட்டமிட்டு உழையுங்கள். அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற உழையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தீவிர கவனம்
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும், அந்த மாவட்ட செயலர் நிச்சயமாக பதவி நீக்கம் செய்யப்படுவார்.
கூட்டணி கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தாலும், அதற்கு காரணமானவர்கள் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மூத்த நிர்வாகி, அமைச்சர் என, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.
சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களை மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் புறக்கணிப்பதாக புகார்கள் வருகின்றன. அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அனைவரும் வழங்க வேண்டும்.
தி.மு.க.,வின் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும், வாரத்திற்கு ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று, தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தர்மபுரி கிழக்கு - தடங்கம் சுப்பிரமணியன், கோவை தெற்கு - முருகேசன், ஈரோடு வடக்கு - நல்லசிவம், சேலம் கிழக்கு - சிவலிங்கம், திருநெல்வேலி - மைதீன்கான், சென்னை தென்மேற்கு - மயிலை வேலு உள்ளிட்ட ஏழு மாவட்ட செயலர்களிடம், ஓட்டுச்சாவடி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் கேள்விகளை எழுப்பி, 'செம டோஸ்' விடுத்துள்ளார்.
மூத்த மாவட்ட செயலர் ஒருவர், '1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் உள்ள விதிமுறைகளில், சில தளர்வுகளை அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் நன்றாக இருக்கும். அனைத்து மகளிர் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும். அவர்களிடம் எந்த ஒருஅதிருப்தியையும் ஏற்படுத்தாது' என்றார்.ஒரு ஓட்டுச்சாவடியில், தலா 100 வாக்காளர்களுக்கு, ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என, ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அந்த பணியை, சென்னையில் உள்ள மூன்று மாவட்ட செயலர்கள்; ஈரோடு, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட சில மாவட்ட செயலர்கள் சரிவர மேற்கொள்ளவில்லை.இதனால், அவர்கள் மீது அதிருப்தி அடைந்த ஸ்டாலின், வழக்கத்திற்கு மாறாக கடுமையாக எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து (44)
பொல்லாத விஷமுள்ள அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாஜகவினருக்கு ஆச்சரியமான செய்தி, அவர்களும் பெரியாரிஸ்ட் சோரியர்களே கொள்கைகள், கோவில்களை சூறையாடுதல், திமுகவிற்கு இணையான ஊழல் செய்தவர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரு போதும் துணிவோ அல்லது குரல் எழுப்பவோ இல்லை மதமாற்ற நடவடிக்கைகள், இந்து மதம், கலாசாரம், இபிஎஸ் ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்வது ஏத்தப்பன் கோழை மற்றும் தைரியம் வேண்டும் திமுகவிற்கோ அல்லது பெரியாரிஸ்டுக்கோ எதிராக அவர்களின் சொந்த அமைச்சர்கள் போல் பேசுகிறார்கள், தலைவர்களும் திமுகவைப் போல் கேவலமாக பேசுகிறார்கள். மேலும் அதிமுகவுடன் பாஜக தொடர்ந்தால், ஆட்சிக்கு வராத போலி காங்கிரஸுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும் 1967க்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்ரேஸ் தனித்து நின்றால் தண்ணீரில்லாத மீன்கள் போல வெட்கமில்லை. மற்றும் திமுகவுடன் தொங்காமல். அ.தி.மு.க. அல்லது எதனுடனும் தொடர்ந்தால் பா.ஜ.க.வும் அதே கீழ்நிலையை எட்டும் மற்ற திராவிட நச்சு சக்திகள் அல்லது இடதுசாரிகள். லாவண்யாவின் போது இந்துக்களுக்கு ஆதரவாக அதிமுக வந்துள்ளதை நினைவில் கொள்ளவும் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், ராமலிங்கம் கொல்லப்பட்டபோதும். இரண்டு கட்சிகளும் ஒன்று நிச்சயம் ஊழல் கொள்ளைப் பணத்தை ஏற்கனவே திரைக்கு பின்னால் புரிந்து கொண்டுள்ளனர், எனவே இரண்டையும் நீங்கள் மட்டுமே கவனிக்க முடியும் கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராக எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்காது, நாய்கள் போல் குரைத்து மறந்துவிடுகின்றன
துர்நாற்றம் வீசும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது உண்மையிலேயே அற்புதமான செய்தி. அவை இன்னும் தொடர்ந்தால் இந்த 3-வது விகிதத்தால் அதிமுக கட்சி ஒருபோதும் முன்னேறாது, 50 ஆண்டுகளுக்குப் பிறகும் பாஜக அதே நிலையில்தான் இருக்கும். மேலும் எடப்பாடி ஒரு ஏட்டப்பன் துரோகி, அவர் பின்வாங்கி பாஜகவை பெரிய அளவில் தோற்கடிப்பார்.3-ம் வகுப்பு சொறிஞர் அதிமுக கட்சியும், தற்போது பாஜகவும் தனித்து போராடி பலத்தை நிரூபிக்க வேண்டிய தருணம் இது வரவிருக்கும் 2024 லோக்சபைத் தேர்தல்களில் அதிகபட்ச இடங்களை வென்று 2026 இல் ஆட்சியைப் பிடிக்கலாம். மேலும் தற்போதைய EPS/AIADMK க்கு முதுகெலும்பு தைரியம் இல்லை அல்லது மக்கள் மேல்முறையீடு இல்லை மற்றும் JAYA அதிமுக அல்ல ஜெயா அல்லது எம்ஜிஆருடன் ஒப்பிடும்போது. அ.தி.மு.க.வில் குறைகள் நிறைந்து ஏற்கனவே தூசி படிந்து துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது. அதிமுக சோரியாரிஸ்ட் தி.மு.க.வை விட சமமாக, அதிக ஊழல், சமமாக கொள்ளையடிக்கப்பட்ட கோவில்கள், மிஷனரிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கின்றன, அமைதியாக இருக்கின்றன இந்து வெறுப்பு, பிராமண துஷ்பிரயோகம், போலி ஸ்டெர்லைட் இயக்கத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை, இது தேசத்திற்கு முழு இழப்பாகும். ஒரு நிர்வாகியாக எட்டப்பன் இபிஎஸ் ஜெயாவுக்கு அருகில் இல்லை, அவர் மிகவும் வலிமையான பெண்மணியாக இருந்தார், இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். கருத்து வேறுபாடு, கட்சிக்கு எதிரான செயல்பாடு அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சனை, வெறுப்பு பேச்சு, நகர்ப்புற நக்சல்கள் இல்லை, இது போன்ற போலி கிளர்ச்சியாளர்கள் 3வது ரேட் NTK SAAMAN குழியிலிருந்து வெளியே வர பயன்படுத்துகிறது. இந்த மோசடிக்கார இபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எந்தவொரு இந்து துஷ்பிரயோகம், வெறுப்பு பேச்சு அல்லது போலி ஆர்வலர்கள் என்று அழைக்கப்படும் தேச விரோதிகளுக்கு எதிராக. அவருக்கு தைரியம் இல்லை, அவரும் கூட புதிய கல்விக் கொள்கை, சீரான சிவில் கோட், CAA அல்லது வேறு ஏதேனும் மத்தியக் கொள்கைகளை எதிர்க்கிறது. தற்போதைய பாஜக இல்லை என்பதில் மகிழ்ச்சி வாஜ்பாய் திறம்பட செயல்படாதவர், கோழை குணம் கொண்டவர், வாஜ்பாயைப் போல் பாஜக அந்த தவறை செய்யவில்லை என்பதில் ' மகிழ்ச்சி அடைகிறார்.கட்டாயத்தின் காரணமாக திமுக போன்ற 3ம் தர தீய கட்சியுடன் கூட்டணி தமிழ்நாட்டில் பிழைப்பு அல்லது அதிமுகவுடன் செல்வது தற்கொலைதான். தயவு செய்து மற்ற பெரியாரிய வஞ்சக கட்சிகளை தவிர்க்கவும் பாமக/விஜயகாந்த்/மோசடி ஓபிஎஸ்/சசிகலா/மோசமான ஊழல்வாதி தினகரன் என உங்கள் கட்சிக்கு தமிழகத்தில் மோசமான இமேஜ் வந்துவிடும்.
பாஜக மையம் இன்னும் அதிமுகவுடன் தொடர விரும்பினால், 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகத்தை மறந்துவிடுங்கள், பாஜக நிலை காங்கிரஸைப் போல இருக்கும், அதற்கு அண்ணாமலை போன்ற பெரிய தலைவர்களும் கவர்ச்சியான தலைவர்களும் தேவையில்லை, சில பயனற்ற திராவிட அனுதாபிகளை வைப்பது நல்லது.
உறங்கிக் கொண்டிருக்கும் இந்து மடங்கள்/பிராமணர்கள்/ மற்றும் பிற இந்து மத குருக்கள் என்று அழைக்கப்படுவதையும் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன் மற்றும் பிரார்த்தனை செய்கிறேன்.அல்லது TN/NATION இல் உள்ள முக்கிய பண்டிதர்கள் உண்மையான இரட்சிப்பைக் கொண்டு வர சத்ரு சம்ஹார சுதர்சனம் மற்றும் பரசுராம ஹோமம் செய்ய தேச விரோதிகளிடமிருந்து விடுதலை பாரதத்தில் காங்கிரஸ்/டிஎம்சி/ஆப்/ஜேடியு/ ஆர்ஜேடி/கம்யூனிட்ஸ் திமுக/அதிமுக/இதர இடதுசாரிகள் மற்றும் அனைத்து இடதுசாரி/தேச விரோத இந்துத்துவக் கூறுகள் கரும்புலிகள் அழிந்து இரக்கமின்றி தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன எந்த தடயமும். இது காலத்தின் தேவையாகும், விரைவில் செய்யப்பட வேண்டும் மற்றும் இரண்டு ஆபிரகாமிய நம்பிக்கைகளும் மறைந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த புனித பாரதத்திலிருந்தும் அசல் உண்மையான நம்பிக்கை மரபுகளிலிருந்தும் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டு, ஓய்வு அழிக்கப்படுகிறது. வேண்டாம் உங்கள் மீட்புக்கு ஏதேனும் அரசு அல்லது நீதிமன்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம், பெரும்பாலான நீதிமன்றங்கள் உயர்நீதிமன்றம்/சிறந்த உச்ச நீதிமன்றமாக அதை மறந்துவிடுங்கள் ஹிந்து எதிர்ப்பு ஆர்வலர்கள், போராட்டக்காரர்களுக்கு ஜாமீன் வழங்க மட்டுமே அவர்களுக்கு நேரமிருந்தால் உங்கள் வழக்கை சீக்கிரம் கேட்க முடியாது. கலகக்காரர்கள், என்ஜிஓ லேடி டீஸ்டா செட்டல்வாட், ஜூபியர் போன்ற போலி பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிற நச்சு தீமைகள்
குறைந்தது பதினைந்து தொகுதிகளில் திமுக தோற்பது நிச்சயம் . ஒரு மாவட்ட செயலாளரய்யாவது நீக்கிவிட்டால் நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன். சும்மா பீலா உடுறதே வேலை