Load Image
Advertisement

அரசியலில் இருந்து விலகினால் தோட்டத்தில் விவசாயம் பார்ப்பேன்: சொல்கிறார் அண்ணாமலை

 "If I leave politics, I will see agriculture in the garden": Annamalai Arudam   அரசியலில் இருந்து விலகினால் தோட்டத்தில் விவசாயம் பார்ப்பேன்: சொல்கிறார் அண்ணாமலை
ADVERTISEMENT
கோவை: அரசியலில் கட்டாயப்படுத்தி நான் இல்லை. அரசியலில் இருந்து விலகினால் தோட்டத்தில் விவசாயம் பார்ப்பேன் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை அன்னூரில் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வரும்போது தூய்மையான அரசியல் என்னும் கனவோடு வந்தேன். ஆனால் அரசியலில் 30 சதவீதம் மட்டுமே நேர்மறையான எண்ணங்கள் உள்ளன. 70 சதவீதம் எதிர்மறையான எண்ணங்கள் உள்ளன.

அரசியலில் கட்டாயப்படுத்தி நான் இல்லை. இருக்க வேண்டும் என இருக்கிறேன். என்னை விட்டு விட்டால் தோட்டத்திற்கு சென்று விவசாயம் பார்ப்பேன்.

முதலில் மக்கள் மாற வேண்டும். தூய்மையான அரசியலுக்கு மக்கள் தயாரானால் அரசியல் வாதிகளும் தங்களை மாற்றி கொள்வார்கள். பிரதமர் மோடி மூன்று கட்டளை பிறப்பித்துள்ளார். அக்டோபர் 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் நாடு முழுவதும் காதி கதர் துணிகளை வாங்கி உடுத்த வேண்டும்.

அக்டோபர் 1ம் தேதியான இன்று ஒரு மணி நேரம் தூய்மை பணி செய்ய வேண்டும். உள்ளூர் உற்பத்தி மூலம் தயார் செய்யப்பட்ட பொருட்களையே வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை நாம் பின்பற்ற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன.

கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள். அவரவர் கட்சியை பலப்படுத்துவது, அவரவருக்கு நோக்கம். எனது நோக்கம் பா.ஜ.,வை வலுப்படுத்துவது. இந்தியாவில் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


பாஜ.,வை பார்த்து திமுகவுக்கு பயம்





கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பொய் செய்திகளை பரப்ப தனது சமூகவலைதளத்தை திமுக பயன்படுத்துகிறது.

பாஜ.,வை பார்த்து திமுக.,வுக்கு பயம் வந்துவிட்டது. தினமும் 25 ஆயிரம் மக்களை சந்தித்து வருகிறேன். கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் உரிய நேரத்தில் பேசுவார்கள். மக்களிடம் தெரியும் எழுச்சி, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதிபலிக்கும். பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. பதவியை தூக்கி போட்டு வந்துள்ளேன். பிரதமர் மோடிக்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.

பிரதமர் மோடியை விட நல்ல அரசியல் தலைவர் கிடைக்க போவதில்லை. நான் எனது கருத்த்தை விட்டு கொடுக்க மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் கிடையாது.

கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம்; கூட்டணி பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும். கம்யூனிஸ்ட் தலைவர்கள் அவர்களது கொள்ளைக்கு முரணமாக செயல்படுகிறார்கள். தமிழகத்தில் கணிப்புகளை தாண்டி நேர் எதிர்த்திசையில் பாஜ., நடைபோடும். தேசத்தில் ஊழலற்ற ஒரே கட்சி பாஜ., என்பதால் தான் பலருக்கு வெறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.


அண்ணாமலை வாக்குவாதம்






நிருபர் கேள்வி :


அண்ணமலையிடம் ஒரு நிருபர் மாநில தலைவராக இல்லை என்றால், பாஜ.,வில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை சற்று டென்ஷன் ஆனார். தொடர்ந்து ,


அவர் அளித்த பதில்:



கேள்வி கேட்க மரபு இருக்கிறது. யார் இந்த மாதிரி கேள்வி கேட்கிறார் என்று மக்கள் பார்க்க வேண்டும். கேள்விக்கு உரிய மரபை தாண்டி விட்டால் அண்ணாமலை யாராக இருந்தாலும் விடமாட்டேன் என அண்ணாமலை கூறினார்.



கேள்வி கேட்க மரபு இருக்கிறது

இதற்கு இடையில் மற்றொரு நிருபர் ஒருவர் நீங்க, காலையில் அரசியலில் இருந்து விலகினால் விவசாயம் பார்ப்பேன் என சொன்னேங்க என்று கூறினார். இதற்கு அண்ணாமலை அளித்த பதில்: உங்க காதை செக் பண்ண வேண்டும். இன்னைக்கும் விவசாயம் பண்ணிக் கிட்டு இருக்கேன். நான் முழு நேர அரசியல் வாதி இல்லை. விவசாயம் என்பது எனக்கு முதல் அடையாளம். பின்னர் அரசியல் வாதி என்பது மற்றொரு அடையாளம்.

கேள்விகள் முறையாக இருக்க வேண்டும். கேள்விகேட்கும் போது நீங்கள் வரம்புமீறக்கூடாது. நீங்க எல்லாம் வளர வேண்டும். டில்லியில் போய் நீங்க தலைமை எடிட்டராக உட்கார வேண்டும். அதற்கு கேள்வி கேட்கிற பக்குவம் இருக்கிறது. நீங்க 40 வயது மேல் எந்த சேனலிலும் பணியில் இல்லாம போய் விட கூடாது என்ற ஆதங்கத்தில் பேசுகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.







டில்லி பயணம் எதற்கு?

தனது பாதையாத்திரை தொடர்பாக விளக்கம் அளிக்க டில்லி செல்கிறேன் என அண்ணாமலை பதில் அளித்தார்.



வாசகர் கருத்து (39)

  • venugopal s -

    சனாதன தர்மத்தின் அடிப்படையில் மத்திய பாஜக அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் அண்ணாமலை அவர்கள் அவரது குலத்தொழிலான விவசாயப் பணிக்கே திரும்ப வாழ்த்துக்கள்!

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

    இங்கு பலர் இந்த கட்டுரையை முழுதாக படிக்காமல் கருது சொல்கிறார்கள் . அண்ணாமலை அவர்கள் தானாக அப்படி சொல்லவில்லை. ஒரு நிருபர் கேட்ட கேல்விக்கு பதில் சொல்லிவிட்டு, அந்த நிருபரை, இப்படியா முட்டாள்தனமான கேள்விகளை கேட்பது என்று கடிந்து கொண்டார். அதற்குள் இங்கே கொத்தடிமைகல் சந்தோஷத்தில் புலம்புகிறார்கள்.

  • Viswam - Mumbai,இந்தியா

    தனிக்கட்சி, பாஜாகாவில் இருந்தால் விளங்காது, நோட்டா கேஸ், விவசாயத்திற்கு போ எல்லாம் கழக கண்மணிகள் உச்சா வெளிப்பாடு அரசியல் என்பது கடினம் என்றால் அரசியல் செய்வது அதைவிட கடினம். மக்களை திராவிட போதையிலிருந்து வெளியே கொண்டுவருவது மகா கடினம். அண்ணாமலைக்கு கிடைக்கும் மீடியா தருணங்களை வைத்து எப்போது கீழிறக்கலாம் என்று அலையும் குமபல்களுக்கு எலும்பு துண்டு வீசி இருக்கிறார்

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    அரசியலில் முதலில் களையெடுப்பு செய்யுங்கள் .....

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    அண்ணாமலை தினமும் பொய் பேசுவதை விட்டு, உருப்படியாக விவசாயம் பார்க்கலாம் , தமிழக ஜனங்கள் நன்றி சொல்வார்கள், பாவம்ங்க பொழைச்சு போகட்டும் , நல்லதையே செய்யுங்க.

    • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

      தசரதன், திருட்டு திராவிட அரசியல்வியாதிகளி பார்த்து உங்கள் கண்கள் புளித்துவிட்டன கண்ணாடியை கழற்றிவிட்டு பாருங்கள் யார் பொய் சொல்கிறார்கள் என்று தெரியும். ஊழல் எதிர்த்து நீங்கள் போராட மாட்டர்கள் போராடுவர்களுக்கு சப்போர்ட் செய்ய மாட்டர்கள். வெட்ககேடு.

    • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

      தசரதனுக்கு உண்மை புரியலை ன்னு நீங்க நினைக்கிறீங்க ..... ஒரு டீம்கா கொத்தடிமையா அவரோட ட்யூட்டியை அவரு சரியா பார்க்குறாரு ன்னு நான் சொல்றேன் .....

    • Bala - chennai,இந்தியா

      மக்களின் மனநிலை எந்த அளவுக்கு திராவிட போதையில் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் திரு தசரதன் அவர்கள். ஒரு இளம் வயது அதிகம் படித்த தைரியமான நேர்மையான, உண்மையான மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொண்டிருக்கும் மனிதன் பாவம் எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாமல் ஒரு ஊழலற்ற நேர்மையான தூய்மையான அரசியலை மக்களின் வாழ்வு மேம்பட தன் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க முடியாமல் தமிழகம் முழுக்க நடைபயணம் செய்து மக்களிடையே ஆட்சியாளர்களின் அவலங்களையும் ஊழல்களையும் அம்பலப்படுத்தி விழிப்புணர்வரவை ஏற்படுத்திக்கொண்டு வருகிறார். மக்களுக்காகவே நல்ல ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். இந்த நல்ல ஒரு வாய்ப்பை மக்கள் நழுவ விட்டுவிட்டால் நட்டம் திரு அண்ணாமலை அவர்களுக்கு அல்ல. அல்லவே அல்ல. நட்டம் மக்களுக்குத்தான். திராவிட கட்சிகளின் பெருத்த ஊழல்களினால் பிற்காலத்தில் அவதிப்படப்போவது திரு தசரதன் அவர்களின் வருங்கால சந்ததியினரும்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வருங்கால சந்ததியினரைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொல்பவர்கள் வேண்டுமானால் எக்கேடு கேட்டு போகட்டும். மற்றவர்கள் அண்ணாமலை அவர்களை ஆதரிப்போமாக

    • Bala - chennai,இந்தியா

      ஊழல் குற்றச்சாட்டுல ஒரு மந்திரி சிறைக்கைதியாக இன்னமும் மந்திரியாக தசரதன் போன்ற மக்களின் வரிப்பணத்தில் தொடர்கிறாரே, அத்தகைய ஆட்சியை ஆதரிப்பவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை என்பது கொஞ்சம் கூட இல்லையா அல்லது டாஸ்மாக் சாராயத்தில் அறிவுதான் மழுங்கிவிட்டதா? இல்லை மக்களை கிள்ளுக்கீரையாக சோற்றால் அடித்த பிண்டங்களாக நினைத்துவிட்டனரா? வருகின்ற தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டவோ அல்லது எதிர்க்கவோ கூடாது டெங்கு மலேரியா கொசுவை ஒழிப்பதுபோல் அழித்து ஒழிக்க வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement