Load Image
Advertisement

தூய்மை இந்தியா திட்டம்: தூய்மை பணி மேற்கொண்ட பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா

 Shah, Nadda, Yogi and others participate in mega cleanliness drive 'Ek tareekh ek ghanta ek saath'  தூய்மை இந்தியா திட்டம்: தூய்மை பணி மேற்கொண்ட பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா
ADVERTISEMENT
புதுடில்லி: தூய்மை இந்தியா திட்டம் கீழ், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ., தேசிய நட்டா உள்ளிட்ட தலைவர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று(அக்.,01) நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இந்நிலையில், பல்வேறு இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மற்றும் பாஜ., தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அந்த வகையில், டில்லியில் மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் “தூய்மையே சேவை இயக்கத்தில் தேசம் கவனம் செலுத்துகையில், அங்கித் பையன்புரியாவும் நானும் அதில் ஈடுபட்டோம். தூய்மைக்கு அப்பால், உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.” என பதிவிட்டுள்ளார்.

டில்லியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தேசிய பாஜ., தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர் மீனகாசி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

உ.பியில் சீதாபூரில் சாலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையை சுத்தம் செய்தார்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையிலும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஹரியானா மாநிலம் குருகிராமிலும் தூய்மை பணி மேற்கொண்டனர்.


வாசகர் கருத்து (6)

  • அப்புசாமி -

    அதுசரி... குப்பைகளை எடுத்து எங்கே போட்டீங்க? குப்பைகளை போட இடம் எங்கே இருக்கு?

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    மறுபடியும் மொதல்லே இருந்தா?

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    சாலையை சுத்தம் செய்தாச்சு, நாட்டை எப்போ சுத்தம் செய்வது ? ஒட்டுமொத்த மல்யுத்த வீராங்கனைகளும் புகார் சொல்லியும், பல மாதங்கள் போராடியும் அந்த எம் .பி. மீது நடவடிக்கை இல்லை , அவரை எப்போ சுத்தம் செய்வீர்கள் ? ராகுல் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை மற்றவர்கள் மீது ஒன்றும் இல்லையா ? அல்லது பொய்.ஜே.பி.யில் சேர்ந்த்ததினால் புனிதர் ஆகிவிட்டாரா?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Publicity....(Cheap).....

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    தேர்தலுக்குத் தேர்தல் இவிங்களுக்கு ஞாபகம் வந்துரும் .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்