ADVERTISEMENT
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை : காவிரி பிரச்னையில் தும்பை விட்டு தி.மு.க., அரசு வாலை பிடிக்கிறது. தி.மு.க., அரசின் பேச்சை நம்பி டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் துவங்கினர்.
குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீரின்றி 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகி விட்டன. மீதமுள்ள 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் கிணற்று பாசன உதவியுடன் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீரின்றி 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகி விட்டன. மீதமுள்ள 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் கிணற்று பாசன உதவியுடன் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
முன் யோசனையின்றி மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி முதல்வர் தண்ணீர் திறந்து விட்டார். ‛நானும் டெல்டாக்காரன்' எனக்கூறும் முதல்வர் பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்றதை தவிர்த்திருக்கலாம். மேட்டூர் அணை நீரை காலி செய்து விட்டு பெயருக்கு மத்திய அரசை காரணம் காட்டி மாநில அரசு காலதாமதம் செய்தது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி நீரை பெற உறுதியான நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (3)
கடந்த அதிமுக ஆட்சியில் அங்கு பிஜேபி அரசு இருந்த போது தண்ணீர் பிரச்சினை இல்லாமல் இருந்தது.
உங்க பேச்சை கேட்டு கர்நாடகா அரசை மிரட்டினால் கூட்டணி காலி.....எனவே வழக்கம் போல தூங்கவேணடும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பங்காளி திமுகவிற்கு கண்டனம் தெரிவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? அடுத்த வருஷம் எதிர்ப்பை தெரிவிச்சு இருக்கலாமே?