Load Image
Advertisement

‛‛மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் ஜாதி வாரி கணக்கெடுப்பு: ம.பி.,யில் ராகுல் பேச்சு

Caste-wise census after coming to power at the centre: Rahuls speech in MP   ‛‛மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் ஜாதி வாரி கணக்கெடுப்பு: ம.பி.,யில் ராகுல் பேச்சு
ADVERTISEMENT
போபால்: ‛‛ மத்தியில் காங்., கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்'' என, அக்கட்சி எம்.பி., ராகுல் கூறினார்.

ம.பி., மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியும், மஹாத்மா காந்தியும் உள்ளனர். மறுபக்கம் பா.ஜ., ஆர்எஸ்எஸ் மற்றும் கோட்சே உள்ளனர். ஒரு பக்கம் வெறுப்புணர்வு, வன்முறையும் உள்ள நிலையில் மறுபக்கம் அன்பு, மரியாதை, சகோதரத்துவம் உள்ளது.

பா.ஜ.,வினர் எங்கு சென்றாலும் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். ம.பி., விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அவர்களை வெறுக்க துவங்கிவிட்டனர். நாட்டின் ஊழலின் மையப்புள்ளியாக ம.பி., உள்ளது.

விவசாயிகள் அறுவடை செய்யும் பயிர்களுக்கு ம.பி., அரசு சரியான விலையை வழங்கவில்லை. சத்தீஸ்கர் விவசாயிகளுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். நாட்டில் முதன்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள். விவசாயிகள் மீது ஜிஎஸ்டி திணிக்கப்பட்டு உள்ளது. எங்கள் அரசு விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காக உழைத்து வருகிறது.

நாட்டில், எத்தனை தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பொதுப்பிரிவினர் உள்ளனர் என நான் கேள்வி கேட்டால் அதற்கு யாராலும் பதில் அளிக்க முடியவில்லை. மத்தியில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததும், முதல் வேலையாக ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்கள்தொகை நடத்தப்படும். இவ்வாறு ராகுல் பேசினார்.


வாசகர் கருத்து (32)

  • Gnanam - Nagercoil,இந்தியா

    கணக்கெடுப்பில் இவரை எந்த சாதியில் சேர்ப்பார்கள்?

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இந்த தத்தி பெண்க லைய்ய பார்த்து கண்ணடிப்பதில் எக்ஸ் பர்ட்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இந்த தத்தி பெண்க லைய்ய பார்த்து கண்ணடிப்பதில் எக்ஸ் பர்ட்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ரீல் சும்மா விட்டு வைப்போம் சட்டத்தின் நுணுக்கங்கள் தெரியாதா வடக்கன் தத்தி. இங்கு தத்தி சீனா தத்தி இபுபுது போனால் காங்கரஸ் கட்சிக்கும் ஒரு தத்தி

  • R S BALA - CHENNAI,இந்தியா

    ஆட்சிக்கு வந்தாதான...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement