Load Image
Advertisement

ரூ.2ஆயிரம் திருப்பி தர கடைசி நாள் கூட்டமில்லை!

 Last day to return Rs. 2 thousand no meeting!   ரூ.2ஆயிரம் திருப்பி தர கடைசி நாள் கூட்டமில்லை!
ADVERTISEMENT
புதுடில்லி: ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற இன்று(செப்.,30) கடைசி நாள் என்ற போதிலும் கூட்டம் இல்லை. இதுவரை 93 சதவீத ரூ.2ஆயிரம் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக, மத்திய ரிசர்வ் வங்கி கடந்த மே19ம் அறிவித்தது. அதேநேரம், மக்கள் தங்கள் வசம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் படி, இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது.

செப்., மாதம் துவக்கத்தில் புழக்கத்தில் உள்ள ரூ.2ஆயிரம் நோட்டுக்களில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. மேலும் மீதமுள்ள 7 சதவீத நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இன்றுக்குள் ரூ.2ஆயிரம் நோட்டை மாற்றாதவர்கள் இனிமேல் ரிசர்வ் வங்கியை அணுகிதான் மாற்ற முடியும். வங்கிகளில் மாற்ற முடியாது.

அதேபோல் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்த முடியாது. அதன் மதிப்பு இனி வேறும் தாள் மட்டும் தான் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பெரும்பாலானோர் தங்களிடம் இருந்த ரூ.2ஆயிரம் நோட்டுகளை முன்னரே மாற்றி விட்டதாக தெரிகிறது. வங்கியில் இன்று கடைசி நாள் என்ற போதிலும் நோட்டை மாற்ற கூட்டம் இல்லை.


வாசகர் கருத்து (4)

  • Rajasekaran - Chennai,இந்தியா

    நாளை முதல் , சாலையோரம் கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் , ஆற்று / நதி நீரில் / சாக்கடை நீரில் மிதந்த ரூபாய் நோட்டுக்கள் என்ற செய்திகள் அடிக்கடி உலா வரலாம்

  • Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்

    கருப்பு பணம் வெளியில் வராமலே தூங்குதோ. 2000 தடை ஓரளவு பலன் தந்து இருக்குமோ..எவ்வளவு கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு உள்ளது ..ரெசெர்வ் வங்கி வெள்ளை அறிக்கை வெளியிடுமா

  • duruvasar - indraprastham,இந்தியா

    திமுகவின் பாராளுமன்ற தேர்தல் வியூகத்திற்க்கு கிடைத்த அடி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement