ADVERTISEMENT
பாட்னா: ‛‛ மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தால், லிப்ஸ்டிக் பூசிய மற்றும் பாப் கட்டிங் செய்த பெண்களே முன்னுக்கு வருவார்கள் '' என லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி எம்.பி., அப்துல் பாரி சித்திக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு நேற்று ( செப்.,29) ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அதனை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது.
இந்நிலையில் முசாபர்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் பாரி சித்திக் பேசியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில், லிப்ஸ்டிக் மற்றும் பாப் கட்டிங் செய்த பெண்களே முன்னேறுவார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் மத்திய அரசு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
உங்கள் மூளையை பயன்படுத்தாமல், டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதையும், சமூக வலைதளங்களில் நேரத்தை பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (22)
சர்ச்சை அல்ல. சரியான பேச்சு.
இதுதான் பல வட இந்தியா கட்சிகளின் நிலைப்பாடு. எதிரிகள் உள்ளேயே இருக்கின்றனர். புள்ளி கூட்டணி கட்சியில் பலதலைகள் இந்த மசோதாவுக்கு எதிரி.
நகரங்களில் வளரும் பெண்மணிகளையே பெரும்பாலும் சென்றடையும். கிராமப்புற/மலை வாழ் பெண்களுக்கு 50 விழுக்காடவது ஒதுக்கப்பட வேண்டும்.
Panam. Padaiththavarkal. Naakarika. Pommaikal. Thaan. Enthakkatchiyilum. Therthalil. Nirkave, jayikkavo. Mudiyum Janaathipathi. Therthal. Onrai. Vaiththe. Vilamparam. Seypavarkal, Avaraiyum. 'Oru. Idaththil'. Thaan. Vaikkiraarkal
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பிற்ப்போக்குவாத பேச்சில் கட்சி பேதமின்றி எல்லா வட இந்தியர்களும் ஒன்று தான்!