ADVERTISEMENT
ஹாங்சு: ஆசிய விளையாட்டு கலப்பு இரட்டையர் டென்னிசில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ருதுஜா போஸ்லே ஜோடி தங்கம் வென்றது. இந்திய ஆண்கள் ஸ்குவாஷ் அணி தங்கம் பதக்கம் வென்றுள்ளது. இதனால், இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா இன்று(செப்.,30) வெள்ளி வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், திவ்யா இணை வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் ருதுஜா போஸ்லே ஜோடி தங்கம் வென்றது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டி
கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் ருதுஜா போஸ்லே ஜோடி தங்கம் வென்றது.
ஸ்குவாஷ் போட்டி: இந்தியாவுக்கு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஸ்குவாஷ் அணி தங்கம் பதக்கம் வென்றுள்ளது. தமிழகத்தின் சவுரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கம் பதக்கமண வென்றனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் இந்திய ஆண்கள் அணி வீழ்த்தியது.
இதுவரை இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.
வாசகர் கருத்து (2)
நாம என்னடான்னா தேசீய விளையாட்டுப் போட்டிகளுக்கே மாணவர்களை அனுப்பாமல்😮💨 ஏமாற்றிவிட்டோம். மிகவும் முன்னேறிய மாநிலமாச்சே. எதுக்கு போட்டி போடணும்?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
நமது நாடு ஆசியாவில் இரண்டாவது பெரிய நாடு. அதன்படி பார்த்தால் பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்க வேண்டும்.