ADVERTISEMENT
கடலுார்,- கடலுார் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். எஸ்.பி., ராஜாராம், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், அய்யப்பன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன் வரவேற்றார்.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் புத்தக கண்காட்சியையும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சியையும் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். புத்தக கண்காட்சிக்காக அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரங்குகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
அப்போது, தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா, துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பகுதி செயலாளர் சலீம், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, எஸ்.பி., ராஜாராம் பிறந்த நாளையொட்டி, மேடையில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கேக் வெட்டி அவருக்கு வாழ்த்துதெரிவித்தனர்.
கடலுார் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு நன்றி கூறினார்.
தமிழ்நாட்டைப் போல் கடற்கரைகள் சீரழிக்கப்படுவது வேறெங்கும் இல்லை. சமாதிகள், புத்தகக் கண்காட்சிகள், மீன் கடைகள், தள்ளு வண்டி உணவகங்கள், ரௌடிகள்...