ADVERTISEMENT
தொகுதி பங்கீடு தொடர்பாக, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை, சென்னை அறிவாலயத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சந்தித்து பேசினார். பின், தங்கள் கட்சி பத்திரிகையில், அறிக்கை ஒன்றை வைகோ வெளியிட்டுள்ளார்.
அதில், லோக்சபா தேர்தல் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ள, 12 மாவட்டங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், இந்த மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் வாரியாக, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கும் பணியை, அக்., 30க்குள் முடிக்கும் படியும், மாவட்ட செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உடனடியாக, தேர்தல் பணிகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்க வேண்டிய அவசரம் உள்ள, ஈரோடு, விருதுநகர், திருச்சி, கடலுார், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய லோக்சபா தொகுதிகள் பட்டியலையும், வைகோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, ம.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: மதுரையில் நடந்த கட்சி மாநாட்டில், 'நான் போட்டியிடவில்லை' என, வைகோ மகனும் கட்சி முதன்மை செயலருமான துரை அறிவித்தார். ஆனால், அவர் போட்டியிட வேண்டும் என, விருதுநகர், திருச்சி, தேனி மாவட்ட ம.தி.மு.க.,வினர், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட, தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என, எம்.பி., கணேசமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு, இரண்டரை லட்சம் ஓட்டுக்களை பெற்றிருந்த துணை பொதுச் செயலர் மல்லை சத்யாவும் களமிறங்க விரும்புகிறார்.
விருதுநகர் தொகுதியில், துணை பொதுச் செயலர் ராஜேந்திரன், மயிலாடுதுறையில், துணை பொதுச் செயலர் ஆடுதுறை முருகன், திருச்சியில் துணை பொதுச் செயலர் டாக்டர் ரொக்கையா, கடலுாரில் பொருளாளர் செந்தில் அதிபன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கேட்கப்படும் ஆறு தொகுதிகளில், தி.மு.க., எத்தனை தரும் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (20)
அரை சீட் தான் தருவாங்க . நின்னா நில்லு இல்லாட்டி போ .
ஆறு ?. டெபாசிட் கிடைக்குமா பாரு
மதிமுக ஆரம்பித்த காலத்தில், இவரது பேச்சாற்றல் கண்டு வியந்த பெரும்பாலான திமுக வினர் இவரை தமிழக முதல்வராக பார்க்க ஆசை பட்டனர். கலைஞரின் ராஜ தந்திரத்தால் அந்த பதவி எட்டாக்கனியாகி விட்டது.
அடி வருடிக்கெல்லாம் 6. அதிகம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ம.தி.மு.க. என்ற கட்சி ஒரு மாற்று சக்தியாகவே உருவெடுத்தது. ஆனால் நடைபயணம் போனவர் கடைசியில் போயஸ்கார்டனில் சங்கமித்தார். அது முதல் இவரது அரசியல் பயணம் பின்னோக்கி போய் விட்டது. இனி அவர் தனித்து நிற்க முடியாது. யார் தோளிலாவது ஏறித்தான் பயணிக்க வேண்டும்.