ADVERTISEMENT
வாரணாசி ஞானவாபி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உ.பி.,யின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி, ஞானவாபி வளாகம் அமைந்து உள்ளது. இங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்தக் கோரி, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதையடுத்து, ஞானவாபி வளாகத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆய்வுக்கு தடை விதிக்கக் கோரி, மாவட்ட நீதிமன்றத்தில், ஞானவாபி மசூதி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், ''இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்து விட்டதால், இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது,'' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
வாசகர் கருத்து (5)
இப்படி மனுக்கொடுக்க முடியும் என்று தெரிந்தால் திரும்ப தலையாரி, விஏஓ, வட்டாட்சியர் என்று வரிசையாக ஜனாதிபதி, யுனஸ்கோ, ஐநா வரை செபா குற்றவாளியில்லை என்று விடுவிக்கச்சொல்லி மனுக்கொடுப்பார்கள்.
மடியில் கனமில்லை என்றால் வழியில் எதற்கு பயம்?
வட இந்தியாவில் பெரும்பாலான மசூதிகள் இந்து கோயில்கலை இடித்து அதன் மேலே முகலாயா வெறியர்கள் காட்டினார்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
எவ்வளோ இஷுக்கணுமோ இஷுயங்கோ கடைசியா சத்தியம் தான் ஜெயிக்கும் சாத்தியமேவ ஜெயதே