Load Image
Advertisement

அசராமல் வசூலை வாரி குவிக்கும் பெண் அதிகாரி!

A female officer who accumulates collections without surprise!   அசராமல் வசூலை வாரி குவிக்கும் பெண் அதிகாரி!
ADVERTISEMENT


''டாலர் சிட்டி நிறுவனங்கள்ல, வசூல் வேட்டை துாள் பறக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''டாலர் சிட்டியில இருக்கிற பின்னலாடை நிறுவனங்கள், உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்ல, தொழிலாளர் நலத்துறையின் அமலாக்க பிரிவினர், தீவிர வசூல் வேட்டை நடத்துதாவ...

''குறிப்பா, உதவி ஆய்வாளரா இருக்கிற ஒரு பெண் அதிகாரி, வசூல்ல புகுந்து விளையாடுதாங்க... எந்தெந்த நிறுவனங்கள், 'பேக்கிங் லைசென்ஸ்' வாங்கலைன்னு பட்டியல் எடுத்துட்டு, அங்க போய், 2,000 முதல் 5,000 வரை வசூலிச்சிடுதாங்க வே...
Latest Tamil News
''அப்புறமா, 'பேக்கிங் லைசென்சை நானே வாங்கி தந்துடுதேன்... அதுக்கு, 16,000 ரூபாய் குடுத்துடுங்க'ன்னும் பேரம் பேசி வாங்கிடுதாங்க வே... ஆனா, பேக்கிங் லைசென்ஸ் வாங்க, 500 முதல், 1,000 ரூபாய் வரை தான் செலவாகுமாம்...

''மீத பணத்தை பெண் அதிகாரி எடுத்துக்கிடுதாங்க வே... தினமும் வெயிட்டான அமவுன்டோட தான் வீட்டுக்கு போறாங்க... இப்படித்தான் தாறுமாறா வசூல் வேட்டை நடத்தியதா, இந்த துறையின் உதவி கமிஷனரா இருந்த பெண் அதிகாரியை, சமீபத்துல துாத்துக்குடிக்கு மாத்தினாவ... அப்புறமும், இந்த பெண் அதிகாரி அசராம வசூல் வேட்டையில வாரி குவிக்கிறாங்க வே...'' என முடித்தார், அண்ணாச்சி.


வாசகர் கருத்து (8)

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

    இப்படி கொள்ளை அடித்து குடும்பத்திற்கு சோறுபோட்டால் அந்த சோறு ஒட்டாது. கர்மா கண்டிப்பாக திருப்பி அடிக்கும், நமது ஹிந்து மதத்தில் மரணத்திற்கு பிறகு சாம்பல் கூட கரைத்துவிடுவார்கள் ஒன்றுமே இருக்கது, பிறகு ஏன் இப்படி சொத்து சம்பாதிக்க வெறி பிடித்து அலைகிறார்கள்? நமது சனாதன கலாச்சாரத்தை வழிமுறைகளை மறந்ததனால் தான் இப்படி வெறி பிடித்து அலைகிறார்கள்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கணக்கில்லாமல் கொள்ளையடித்தால் டாலர் சிட்டி டல் சிட்டியாகாமல் என்ன செய்யும்?

  • V.Saminathan. - ,

    அங்கும் காங்கேயம் போன்ற பகுதிகளிலுமே பெண் தொழிாளர்கள் சித்ரவதை செய்யப்படுகின்றனர்.இந்த லட்சணத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தேவையா?

  • M Ramachandran - Chennai,இந்தியா

    காகித ஓடம் கடல் அலை மேலே போவது போலே யாவரும் போவோம்

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    பணம் பாதாளம் வரையும் பாயும்,,,சரி, அப்படியே மேலே எது வரைக்கும் பாயும்? தெரிஞ்சவங்க சொல்லுங்க.பின்ன அசராம அள்ளுறாங்கன்னா என்ன அர்த்தமாம் அப்படீங்கராங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement