அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி முறிவு விவகாரம், எவ்வித சிக்கலும் இல்லாமல் சென்ற தி.மு.க., அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பழனிசாமிக்கு, வலுவான கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பா.ஜ.,வுடன் இருந்த வரை, அ.தி.மு.க.,வை எதிரியாக பார்த்த வி.சி., கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்றவை, இப்போது நட்புக்கரம் நீட்டத் துவங்கியுள்ளன.
அரசியல் காற்று, திசை மாறி அடிப்பதை வாய்ப்பாக பயன்படுத்தி, தி.மு.க.,விடம் அதிக தொகுதிகள் கேட்டு, கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ்
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி முறிவுக்கு முன், இந்த 10 தொகுதிகள் கிடைத்தாலே போதும் என்ற மனநிலையில் தான் காங்கிரஸ் இருந்தது.
நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, 'வரும் தேர்தலில், ஐந்து தொகுதிகள் மட்டுமே தருவதாக தி.மு.க., கூறுகிறது' என வெளிப்படையாக புலம்பியிருந்தார்.
இப்போது, அரசியல் சூழல் மாறியிருப்பதால், 2009 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகள் வேண்டும் என, காங்கிரஸ் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்துவது போல, '2019 தேர்தலை விட, அதிக தொகுதிகளை, தி.மு.க.,விடம் கேட்டு பெறுவோம்' என, அடித்து சொல்கிறார் அழகிரி.
ம.தி.மு.க.,
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஈரோட்டிலும், 2021 சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிட்டது.
மகனை எம்.பி.,யாக்கினால் போதும் என்றிருந்த அக்கட்சி பொதுச்செயலர் வைகோ, இப்போது விருதுநகர், திருச்சி, கடலுார், காஞ்சிபுரம், ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய ஆறு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க.,விடம் பட்டியல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆறு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு, கட்சியினரை வைகோ அறிவுறுத்திய தகவலும் வெளியாகி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள்
கடந்த தேர்தலில், சிதம்பரத்தில் தனி சின்னத்திலும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது.
இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ள வி.சி., தலைவர் திருமாவளவன், 13 தொகுதிகளை தேர்வு செய்து, பொறுப்பாளர்களையும் நியமித்திருக்கிறார். அந்த 13ல், நான்கு தொகுதிகள் வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருக்கிறது.
மார்க்., கம்யூ.,
அதுபோல 2019ல் மதுரை, கோவையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூடுதலாக திருச்சி தொகுதியையும் கேட்கிறது.
இதனால், அனைத்து தொகுதிகளையும் கவனமுடன் ஆராய்ந்து, செல்வாக்கு குறித்த ஆதாரத்துடன் கூட்டணி கட்சிகளைக் கையாள, தி.மு.க., முடிவு செய்துள்ளது.
அதிக தொகுதிகள் கிடைக்கும்
சந்தர்ப்பவாதம், சபலங்களுக்கு
காங்கிரசில் இடமில்லை. காங்கிரஸ் அணி மாறும் என்ற தகவல், அ,தி.மு.க.,வும்,
பா.ஜ.,வும் திட்டமிட்டு பரப்பும் வதந்தி. 'இண்டியா' கூட்டணி உடைய வேண்டும்
என, அவர்களுக்கு ஆசையாக இருக்கலாம். ஆனால், எங்கள் கூட்டணி வலிமையானது.
மதம்
சார்பற்ற அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஆற்றல், ராகுல் தலைமையிலான
காங்கிரசுக்கு தான் உண்டு என்பதை மக்கள் அறிவர். இதற்கு உற்ற துணையாக
இருப்பது, தி.மு.க., தலைமை. மக்கள் விரோத மோடி அரசை அகற்ற வேண்டும் என்ற
ஒற்றை சிந்தனை தான், இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இருக்கிறது.
கூட்டணியில்
தொகுதி பங்கீடு என்பது உரிய நேரத்தில் தலைவர்களால் முடிவு செய்யப்படும்.
கடந்த லோக்சபா தேர்தலில், ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை
அதை விட குறையும் என, யாரும் சொல்லவில்லை. அதிக தொகுதிகள் தான் எங்களுக்கு
கிடைக்கும்.
- அழகிரிதமிழக காங்கிரஸ் தலைவர்
வைகோ விரும்பும் ஆறு களமிறங்குவது யாரு?
லோக்சபா தேர்தல்
குறித்து கலந்தாய்வு மேற்கொள்ள, 12 மாவட்டங்களில் கூட்டம் நடத்த வேண்டும்
என்றும், இந்த மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் வாரியாக, பூத் கமிட்டி
நிர்வாகிகள் நியமிக்கும் பணியை, அக்., 30க்குள் முடிக்கும் படியும், மாவட்ட
செயலர்களுக்கு வைகோ உத்தரவிட்டுள்ளார்.
உடனடியாக, தேர்தல்
பணிகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்க வேண்டிய அவசரம் உள்ள ஈரோடு,
விருதுநகர், திருச்சி, கடலுார், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய லோக்சபா
தொகுதிகள் பட்டியலையும் வைகோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, ம.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
மதுரையில்
நடந்த கட்சி மாநாட்டில், 'நான் போட்டியிடவில்லை' என, வைகோ மகனும், கட்சி
முதன்மை செயலருமான துரை அறிவித்தார். ஆனால், அவர் போட்டியிட வேண்டும் என,
விருதுநகர், திருச்சி, தேனி மாவட்ட ம.தி.மு.க.,வினர் தீர்மானம் நிறைவேற்றி
உள்ளனர்.
ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட, தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என, எம்.பி., கணேசமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு, இரண்டரை
லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்த துணை பொதுச் செயலர் மல்லை சத்யாவும் களமிறங்க
விரும்புகிறார்.
விருதுநகர் தொகுதியில், துணை பொதுச் செயலர்
ராஜேந்திரன், மயிலாடுதுறையில், துணை பொதுச் செயலர் ஆடுதுறை முருகன்,
திருச்சியில் துணை பொதுச் செயலர் டாக்டர் ரொக்கையா, கடலுாரில் பொருளாளர்
செந்தில் அதிபன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.'இவங்களுக்கு ஒரு தொகுதி கொடுத்தாலே பெரிசு...' என தி.மு.க.,வினர் நகைக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (53)
THAT will be the total seats to be won by congress in south india .Neither viduthalai chiruthagal nor vaiko will win a seat with individual symbol.
காவேரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகா முதல்வரிடம் (இவரின் கூட்டணி கட்சி) நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தாததால் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். சித்தராமையா அவர்களுடன் பேச இயலாவிட்டாலும், காங்கிரஸின் PM வேட்பாளர் (திமுக தலைவர்தான் அறிவித்தார்) ராகுல் காந்திஜி அவர்களிடம் நேரடியாக சென்று காவிரியில் தமிழகத்திற்கு தேவையான நீரை கொடுக்க சித்தராமையா அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க செய்திருக்கலாம். திமுகவின் MP க்கள் காங்கிரஸிற்கு நிச்சயம் தேவை. இதனை நம் முதல்வர் தமிழக டெல்டா விவசாயிகளுக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
கொங்கு, முஸ்லிம், பார்வடு, குலத்தோர்...., என ஒன்று ஒன்று கொடுத்தால் டெங்கு மலேரியா கொசுக்கு 6 தான் கிடைக்கும்.
திமுக விற்கு தனது சுய பலத்தையும், கட்சி கொள்கைகளையும் மக்களிடையே நிரூபிக்க ஒரு அற்புதமான சந்தர்ப்பம் அமைந்துள்ளது. வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தனியாக நின்று அணைத்து தொகுதிகளையும் வென்று காட்ட வேண்டும். திமுக வின் கூட்டணி கட்சிகளுக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை. சீமானுக்கு இருக்கும் செல்வாக்கு கூட திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இல்லை என்பதே உண்மை.
congress loksabha seats2024 kerala-15 karnataka -6 tamilnadu-4 andhra-3.That numbers are seats to be won by congree in south india