அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிந்து விட்டதாக, கடந்த 25ல், அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் கே.பி.முனுசாமி அறிவித்தார். இருந்த போதும், மீண்டும் கூட்டணியை மலர வைக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
அந்த இருவர் வாயிலாக, நேரடியாக களம் இறங்கி இருப்பவர் பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா. பா.ஜ., மேலிட ஆசியுடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில், இவர் தமிழகம் வந்து வேலுாரில் கட்டப்பட்டுள்ள, 'அசாம் பவன்' கட்டடத்தை திறந்து வைத்தார். பின், ரகசியமாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரத்துக்கு சென்று, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., பிரமுகர்கள் இரண்டு பேரை சந்தித்துள்ளார்.
இது குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
'அசாம் மாநிலத்தில், 3,000 தமிழக பணியாளர்கள் சாலை, மின்சாரம், கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். அவர்கள் அ.தி.மு.க., பிரமுகருக்கு சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
அசாம் மாநிலத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமான பணி ஒப்பந்தங்களை அ.தி.மு.க., பிரமுகர் நிறுவனம் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளாக இந்த பணிகள் முழு வேகத்தில் நடக்கின்றன. இதற்காக கணிசமான கமிஷன் தொகையும், அசாம் மாநிலத்தில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் ஆளுங் கட்சியினர் அ.தி.மு.க., பிரமுகரின் நிறுவனத்துடன் நல்ல தொடர்பில் உள்ளனர். இந்த கட்டுமான பணிகளை அ.தி.மு.க., பிரமுகருக்கு வாங்கிக் கொடுத்தது ஒரு பா.ஜ., பிரமுகர்.
இப்போது பா.ஜ., - அ.தி.மு.க., இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த இரண்டு பிரமுகர்களும் சேர்ந்து, அசாம் மாநில முதல்வர் வாயிலாக டில்லி மேலிடத்திடம் பேசி, மீண்டும் சுமுக நிலை ஏற்பட முயற்சித்து வருகின்றனர். அதற்காகவே, அசாம் முதல்வர் பிஸ்வ சர்மா, களப்பணியாற்றி வருகிறார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. -நமது நிருபர்-
வாசகர் கருத்து (59)
திராவிட கட்சிகள் இல்லை என்றால் இங்கே ஜெயிக்க முடியாது என்பது உறுதி .இதனாலேயே இவ்வளவு அமைதி
இனிமே இவர்கள் சேர்ந்தாலும் அல்லது பிரிஞ்சி போனாலும் மக்கள் சீந்த மாட்டார்கள் ...அவ்வளவு வார்த்தை விளையாட்டு ரெண்டு பேருக்கு ம் இடையே நடந்த பின்னர்...
அதிமுக பா ஜா க கூட்டணி வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. இதற்கு காரணம் அதிமுக இல்லை. பா ஜா க 0 பி எஸ் + தினகரனையும் கூட்டணிக்குள் வைத்துக்கொண்டு அதிமுகவுடன் கூட்டணி பேசுவதை இ பி எஸ் ஒத்துக்கொள்ள மாட்டார். 0 பி எஸ் + தினகரன் இருக்கும் கூட்டணியில் இருப்பதற்கு அதிமுக இரண்டரை ஆண்டுகாலம் சட்ட போராட்டம் நடத்தி ஓரளவு தெளிந்த நிலையில் மறுபடியும் மொதல்லேயே இருந்து ஆரம்பிக்க இ பி எஸ் திட்டவட்டமாக சம்மதிக்க மாட்டார். அதிமுக சீமானுடன் கூட்டணி வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். 0 பி எஸ் + தினகரனை தவிர்த்து பா ஜா க தனியாக நிற்பதற்கான வாய்ப்பும் குறைவே(அதனால் பெரிய லாபம் இருக்காது). மொத்தத்தில் ஓரளவு சமமான மூன்று முனை போட்டியாக இருக்கலாம்.
நான் சிறுவனாக இருந்த போது அர்த்தம் புரியாமல் கேட்ட பழமொழி,"நாயை அடிப்பானேன், பிறகு அதன் மலத்தை சுமப்பானேன் ?" . ஆனால் இப்போது பாஜகவைப் பார்த்தால் அதன் அர்த்தம் விளங்குகிறது!
ஆணியே புடுங்க வேணாம். இந்த ஃபெவிக்கால் பிஸ்னஸ்லாம் இனி கதைக்காவாது. ரொம்ப வளச்சீங்க, இந்தா புட்டுக்கிச்சில்ல. எவ்ளோ நேக்கா அத்து உட்டுட்டாய்ங்க. இன்னும் புடிச்சி தொங்கிகிட்டு. நீங்க பேசாம ஓபிஎஸ், டிடிவி.தினகரன், வேல்முருகன், கொங்கு தமிழரசு போன்ற மாபெரும் தலைவர்களுடன் இணைந்து போட்டியிட்டு 39 க்கு 39 இடத்தையும் புடிச்சிக்கோங்க. அவிங்க எதுனாச்சும் செஞ்சிட்டு போவட்டும்.