ஹாங்சு: ஆசிய விளையாட்டில் இன்று (செப்.,29) இந்தியா துப்பாக்கிச்சுடுதலில் தங்கமும், ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் வெள்ளியும் வென்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி நூலிழையில் சீனாவிடம் தங்கப் பதக்கத்தை தவறவிட்டது. சீன அணி 1736 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், இந்திய அணி 1731 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றது.
அதேபோல், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் 17 வயதான பாலக் தங்கப் பதக்கமும், 18 வயதான ஈஷா சிங் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி தோமர் வெள்ளிப் பதக்கம் வென்றார். நடப்பு ஆசிய போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 6 தங்கம் கிடைத்துள்ளது.
டென்னிஸ்-ல் வெள்ளி
ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஷாகித் மைநேனி - ராம்குமார் ராமநாதன் ஜோடி, சீனா தைபேவை சேர்ந்த ஜங் ஜேசன் - ஷு யூ ஷியோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்ந்தது. இதனால் வெள்ளிப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது.
ஸ்குவாஷ் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கண்ணா மற்றும் அனஹத் சிங் அடங்கிய இந்திய அணி வீராங்கனைகள் வெண்கலம் வென்றது.
இதுவரை இந்தியா 8 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.
வாசகர் கருத்து (4)
ஆசிய கண்டத்தில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. அதற்கு தகுந்தபடி போட்டிகளில் வெற்றி பெற்று தர வரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் வர வேண்டும்.
அற்ப்புதம் அபாரம் இதே படைக்க பட்டியல் ஒலிம்பிக் விளையாட்டில் தொடரட்டும் வாழ்த்துக்கள்
சாதனை படைத்தவர்களுக்கு வாழ்த்துகள்.. சாதனை படைக்கும் திறமையாளர்கள் வெளிகொணரவேண்டியது அரசை விட மக்களுக்கு உள்ளது. பள்ளிகளில் உடல் பயிற்சி ஆசிரியர்களுக்கு போதிய ஆதரவு நிர்வாகம் கொடுப்பது இல்லை. பள்ளிகளில் நிறைய ஏகலைவன் உள்ளனர்.
வாழ்த்துக்கள்