ADVERTISEMENT
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி வாங்கிய ஓட்டுகள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், 25 ஆயிரம் ஓட்டு வாங்கியுள்ளேன், நீங்க துாக்கில் தொங்குகிறயா?, விஷம் குடிக்கிறியா எனவும், பெயரை கேட்டு இஸ்லாமியர் என்பதால் ஒருமையில் சீமான் பேசியதற்கு கண்டனம் வலுத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நிருபர்களிடம் கூறியதாவது; தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் வருகிறார்கள் என தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் "ஒரு தொகுதிக்கு 3,000 ஓட்டு மட்டும் வாங்கினால் போதுமா சார்" என கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆவேசம் அடைந்த சீமான், "ஒரு தொகுதிக்கு 25,000 ஓட்டு வாங்கி இருக்கேன்.. நீங்க தூக்குல தொங்குவீங்களா? தூத்துக்குடியில் 35,000 ஓட்டு வாங்கி உள்ளேன். விஷம் குடிக்கின்றீர்களா? 3000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் என்று சொல்லுங்கள். நான் தீக்குளிக்கிறேன். எந்த இதழில் இருந்து வருகிறீர்கள்?" என கேட்டார்.
அந்த செய்தியாளர் பெயரை சொன்னவுடன், "அப்ப நீ பேசுவ" என ஒருமையில் சீமான் விமர்சித்தார். இதன் காரணமாக அந்த பத்திரிகையாளருக்கும் சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சீமானின் இந்த கருத்துக்கு பத்திரிகையாளர் சங்கங்கள், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (10)
இவர் எல்லாம் ஒரு தலைவர் என்று ஒரு கூட்டம் பின்னால் திரிகிறார்களே என்று மிக வேதனையாக இருக்கிறது அதிலும் படித்த மூதேவிகளும் அலைகிறார்கள்
சிறுபான்மைகள் ஓட்டு விஷயத்தில் கண்ணாய் இருப்பார்கள்
எதாவது ஒரு தொகுதியில் குறைந்த வாக்குகள் வாங்கி இருந்தால் சீமான் விஷம் குடிப்பார்களா. வார்த்தைகளில் மரியாதை மற்றும் கவனம் தேவை
இஸ்லாமியருக்கு எதிராக செயல்படுவதை போன்று சீமான் ஹிந்து ஓட்டுக்களை பிரிக்க நாடகம் போடுகிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
In fact Seeman speech was natural in line with his style.