அதிமுக- பா.ஜ., கூட்டணி முறிவு வெறும் நாடகம் என அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி இன்று(செப்., 28) நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணிக்கு வருமா என்பதை காலம் தான் முடிவு செய்யும். நாங்கள் கூட்டணி முறிவு என்று அறிவித்தவுடன் அவர்களுக்கு பயம் வந்ததால் தான் கட்சிகளை கூப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர்.
அண்ணாமலையை மாற்ற சொல்லவில்லை!
அதிமுக பெரிய இயக்கம். ஒரு சிறுப்பிள்ளைத்தனமாக ஒரு கட்சியின் மாநில தலைமையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. அப்படியான ஒரு தவறை நாங்கள் எப்போதும் செய்ய மாட்டோம். ஒரு கட்சி இப்படித்தான் செயல்பட வேண்டும் என நாங்கள் தலையிட்டு சொல்வதற்கு நாகரிகமற்றவர்கள் அல்ல. இவ்வாறு கேபி முனுசாமி கூறினார்.
இதற்கு, ''தமிழகத்தில் பாஜ., பெரிய அளவில் வெற்றி பெறும். வள்ளுவர்
மண்ணில் தாமரை மலரும் '' என பாஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (53)
இவருக்கே கர்னாடகாவில் தாமரை.மலரலையாம். தமிழ்நாட்டில் இவர் ஆரூடம் சொல்ராராம்.
முன்பு votes சிதறிக் போய் திமுக ஜெயித்து விட க் கூடாது என்று அதிமுக வுக்கு vote போட்டவர்கள் எல்லாம் இப்போது BJPக்கு போடுவார்கள். அண்ணாமலையின் கடுமையான உழைப்பினால் BJP வெற்றி பெறும்
He is not able to win his MLA seat in karnataka, now he is saying bjp will blossom in TN. First let him win his seat and come to TN.
"ஆளுனரா ஆளுங்கட்சி தலைவரா? எப்படி கட்சி சார்புள்ள நிலைப்பாட்டை அவர் எடுக்கலாம்? இதோ குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்.." என்றெல்ல்லாம் கூச்சல் போடலாம் என்றால் இது வேற ரவி வட போச்சே
எது எப்படியோ, பாஜகவை எல்லோரும் சேர்ந்து தமிழகத்தில் குழி தோண்டி புதைத்து விட்டீர்கள், மகிழ்ச்சி!