ADVERTISEMENT
ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில், இதுவரை 6 தங்கப் பதக்கங்களோடு 24 பதக்கங்களை வென்று இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில், பல்வேறு பிரிவில், பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது. நேற்று(செப் 27) வரை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 (5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம்) ஆனது. இன்று(செப்.,28) ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அசத்தி வருகிறது.

துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி பிரிவில், இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்தியா வீரர்களான அர்ஜூன் சீமா, சராப்ஜோட் சிங் மற்றும் ஷிவ நர்வா ஆகியோ தங்கம் வென்றனர்.
வெள்ளி
அதேபோல், ஆசிய விளையாட்டு போட்டியின் வுஷூ மகளிர் 60 கிலோ இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இன்று(செப்., 28) இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி கிடைத்துள்ளது. இதனால், இதுவரை 6 தங்கப் பதக்கங்களோடு 24 பதக்கங்களை வென்று இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
தனிநபர் குதிரையேற்ற போட்டியில், இந்தியாவின் அனுஷ் அகர்வால், வெண்கலம் வென்றார்.
வாசகர் கருத்து (3)
அதுசரிங்க""நாங்க இந்தியர் "so"இட ஒதிக்கீடு குடுத்துபாறுங்க..அப்ப ஓஹோஹோமெடல்தான்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
சீனா "76" தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் "140" பதக்கங்களோடு முதல் இடத்தில உள்ளது. இந்தியா உலக அரங்கில் பெருமை பெற்று வல்லரசாக வேண்டுமென்றால் இது போன்ற விளையாட்டு அரங்கங்களில் நாம் இன்னும் பலமடங்கு சாதனை புரியவேண்டும். நாம் பதக்கப்பட்டியலில் இப்போது தாய்லாந்து, கொரியா, உஸ்பேகிஸ்தான் போன்ற சிறிய நாடுகளை விட பின்தங்கியே இருக்கிறோம்.