லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி வியூகங்களை அமைப்பதில் 'பிஸி'யாக உள்ளன. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் தி.மு.க., உள்ளது.
தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக பேசிவரும் ம.நீ.ம., தலைவர் கமல், கோவை தொகுதியில் போட்டியிட விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகன் தயாநிதி போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என அழகிரி ஆதரவாளர்களும், தி.மு.க., விசுவாசிகளும் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
மதுரையில் பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டரில் '2024ன் மதுரையின் நாயகனே வெல்க... நீ அஞ்சான் வீட்டுப் பிள்ளை உன் விசுவாசிகள் தஞ்சம் போனதில்லை...' என்ற வரிகளுடன் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ளன.
மதுரை, கோவை தொகுதிகளை மா.கம்யூ.,விற்கு கடந்த தேர்தலில் தி.மு.க., ஒதுக்கியது. இந்த முறை கோவை தொகுதியை கமலுக்கு ஒதுக்கி, மதுரையை தி.மு.க., எடுத்துக்கொண்டால், மார்க்சிஸ்ட் பாடு திண்டாட்டமாகி விடும். இதனால் அக்கட்சி அதிர்ச்சியில் உள்ளது. மதுரையின் வளர்ச்சிக்கென்று தற்போதைய மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் ஏதும் செய்யவில்லை என தி.மு.க.,வினரே வெளிப்படையாக கூறிவருகின்றனர். தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்க தலைமையிடம் கேட்டு வருகின்றனர். அப்படி ஒதுக்கப்படும் போது தயாநிதி போட்டியிட வாய்ப்பு உள்ளது.
மதுரை தி.மு.க., வினர் கூறியதாவது: மதுரையில் தி.மு.க., தான் போட்டியிட வேண்டும். மீண்டும் கம்யூ.,க்கு ஒதுக்கினால் 90 சதவீதம் நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் வேலை செய்ய மாட்டார்கள். எம்.பி., வெங்கடேசன், பேஸ்புக், டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார். உள்ளூர் தேவைகள் அவருக்கு தெரியவில்லை. இவருக்கு மீண்டும் ஒதுக்கினால் எதிர்த்து போட்டியிடுபவர் எளிதில் வெற்றி பெறுவார். ஆகையால் அழகிரி மகனுக்கு மதுரையை ஒதுக்கி இதனை தி.மு.க., தொகுதியாக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து (23)
ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்து வீடும் விளங்காது என்பது போல் கம்யூனிஸ்ட் புகுந்த கம்பெனியும் நாடும் என்றும் விளங்காது. எல்லா கட்சிகளுக்கும் தற்பொழுது தொழில் சங்கங்கள் உள்ளன.அப்படியிருக்க நமக்கு ஏதற்கு கம்யூனிஸ்ட் சங்கங்கள் தேவை. கம்யூனிஸ்ட்கள் சீனாவிற்கு திரும்பி செல்லட்டும்.1). கம்யூனிஸ்ட் கோட்பாடுகள் உலகம் முழுவதும் தோல்வியை தழுவிவிட்டது 2). சீன்வில் கூடிய விரைவில் தற்போதைய அதிபர் கிளம்பிய உடன் காலியாகிவிடும்.3). கம்யூனிஸ்ட்கள் வேலையே அடுத்தவர் சாப்பாட்டு உலையில் மண்ணை அள்ளி போடுவதுதான். 4). கம்யூனிஸ்டை வளர்த்த கேரளாவில் தொழிற்சாலை அமைக்க யாரும் முன்வருவது இல்லை என்பதில் தெரிகிறது இவர்களது புகழ். 5). பச்சோந்திகள். இடத்திற்கு தகுந்தவாறு நிறம் மாற்றி கொள்வார்கள். 6). திமுக இவர்களை இந்த தேர்தலில் கழட்டி விட்டு விட வேண்டும்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியரே ன்னு போஸ்டர் ஒட்டல்லயா?
உண்டியல் குலுக்கிகளை என்று மக்கள் தூக்கி எறிகிறார்களோ அன்றுதான் விடிவுகாலம் பிறக்கும். எதையெல்லாம் எதிர்த்தார்களோ அதையலாம் ஆளும்கட்சி கூட்டணி இருக்கும்போது வெட்கம் மானம் இல்லாமல் ஆதரிக்கிறார்கள்
வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்பதை பா.ஜ.க. வினர் சொல்லுவதை கேட்டு கேட்டு புளித்துப்போய்விட்டது என்றான் ஒருவன். காது புளித்தவனுக்கு மூளையும் புளித்துப்போயிற்றுபோல..
மதுரை மாநகரம் தி மு க வெற்றி பெற்றால் கொலை நகரமாக மாறி விடும். ரௌடிகள் கட்டவிழ்த்து விட படுவார்கள்