Load Image
Advertisement

சர்ச்சையாக பேசி மாட்டிக்காதீங்க: அமைச்சர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

 CM advises ministers not to talk about anything other than the department  சர்ச்சையாக பேசி மாட்டிக்காதீங்க: அமைச்சர்களுக்கு முதல்வர் அட்வைஸ்
ADVERTISEMENT
சென்னை: அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால் 'இனி ஊடகம் உட்பட பொது வெளியில் பேசும் போது துறையின் செயல்பாடு தவிர்த்து வேறு எதுவும் பேசக்கூடாது' என அனைத்து அமைச்சர்களிடமும் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. வட்டாரங்கள் கூறியதாவது:சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற விளையாட்டு துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பாக பல மாநிலங்களில் அவர் மீது போலீசில் புகார் அளித்ததுடன் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உதயநிதிக்கு சமீபத்தில் 'நோட்டீஸ்' அனுப்பி பதிலளிக்க உத்தரவிட்டது. முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் கூறியதாவது:உதயநிதி சனாதானம் குறித்து பேசிய விவகாரத்தை பா.ஜ. நாடு முழுதும் கொண்டு சென்று ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து போராட்டமும் நடத்தியது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் ஆறு மாதங்களே அவகாசம் உள்ளது.

எனவே அமைச்சர்கள் தங்கள் துறை தொடர்பான ஆலோசனை கூட்டங்களின் போதும் ஊடகத்தினரை சந்திக்கும் போதும் பொது நிகழ்ச்சிகளில் பேசும் போதும் கவனமுடன் பேச வேண்டும். நிகழ்வுகளில் துறையின் செயல்பாடு தொடர்பாக மட்டுமே பேச வேண்டும். தங்களின் துறை தவிர்த்து வேறு எதுவும் பேச கூடாது; பல முறை அறிவுறுத்தியும் சர்ச்சை ஏற்படும் வகையில் சிலரின் செயல்பாடு உள்ளது. இனி அப்படி இருக்க கூடாது. இவ்வாறு முதல்வர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

'எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பங்கேற்பதற்கு முன் அதன் அவசியம் ஏற்பாட்டாளரின் பின்னணி முழுதும் தெரிந்த பின்பே பங்கேற்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு தி.மு.க. வட்டாரங்கள் கூறின.


வாசகர் கருத்து (39)

 • Baskar - sollamudiyatha naadu,இந்தியா

  ஒரு தடவ உண்மைய சொன்ன உதயநிதியால் தீமுகவிற்கு எவ்வளவு கஷ்ட காலம் இதுக்கு இவங்க எல்லாரும் பொய்யே பேசி இருக்கலாம்

 • Sathyam - mysore,இந்தியா

  அண்ணாமலை ஐயா, ஜெயாவுடன் உங்களுடன் உடன்படுகிறேன். அவளுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றும் கவர்ச்சியான தலைமை இருந்தது. குணங்கள் மற்றும் நல்ல நிர்வாகி மற்றும் அவர்களின் சொந்த அமைச்சர்களாக இருந்தாலும் நடவடிக்கையில் மிகவும் கண்டிப்பானவர் தவறு மற்றும் சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக இருந்தது.. EPS முற்றிலும் ஆண்மையற்ற கோழை மற்றும் நான் நினைக்கவில்லை அவர் கூட்டணியில் சேர்க்கப்படத் தகுதியானவர், கடந்த 3 ஆண்டுகளில் அவரது பாடல் மிகவும் மோசமாக இருந்தது அவர் 2024 ஆம் ஆண்டு லோக்சபாவில் திமுகவைக் கையாளவோ அல்லது போட்டியிடவோ முடியும் என்று நினைக்கவில்லை, அவருடைய புகழ் வரைபடம் கடுமையாக உள்ளது கீழே வா. அ.தி.மு.க.வில் மொத்த சீர்குலைவு இல்லை, திறமையான, கூர்மையான பேச்சாளர் அல்லது திறமையான தலைவர்கள் இல்லை. அவர்களில் பெரும்பாலோர் திமுகவை ஒத்தவர்கள் மற்றும் 3வது தரம் பெற்றவர்கள். அதிமுகவை பாஜக கைவிட வேண்டும் என்று நான் தீவிரமாக உணர்கிறேன் அவர்களை அந்த நிலைக்கு வற்புறுத்தி, கே.அண்ணாமலையுடன் தமிழக பா.ஜ.க., பா.ஜ.க.வில் உள்ள ஹைகமாண்டை சமாதானப்படுத்த வேண்டும் வாக்குப் பரிமாற்றம் நடக்காமல் இருப்பதை இபிஎஸ் உறுதி செய்வதால் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அவர் அதிக உள் சேதத்தை ஏற்படுத்துவார், அவர் வேறு கட்சியை விரும்பமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் திமுக போட்டியாளராக இருந்து அவர் முற்றிலும் நம்பிக்கைக்குரியவர் அல்ல. 2024/2026 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் தேர்வு எதுவும் இல்லாததால், தீவிர பிரச்சாரம். திமுகவைப் போலவே அதிமுகவும் அதே சித்தாந்தத்துடன் உள்ளது அதே இந்து விரோத மிஷனரிகள், சிறுபான்மையினருக்கு ஆதரவான மதமாற்றம் மற்றும் அவர்கள் செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் மத்தியில் பாஜக நிறைவேற்றும் எந்த மசோதாவையும் ஆ தரிக்கவில்லை. EPS/AIADMK வாக்குகள் இப்போதுதான் அதிகபட்சமாக உள்ளது 18% மற்றும் சில மாவட்டங்கள் மட்டுமே. அவர் மீண்டும் ஒரு கோழை, சண்டையிட முதுகெலும்போ முதுகெலும்போ இல்லை திமுகவுக்கு எதிராக கடுமையாக உள்ளது

 • Sathyam - mysore,இந்தியா

  ஸ்டாலின்/திமுக/இபிஎஸ்/அதிமுக/என்டிகே சமனனால் தமிழகத்தை கல்லறையாக, குடிகாரர்கள் அல்லது போதைக்கு அடிமையானவர்களின் பூமியாக மட்டுமே மாற்ற முடியும்.கேரளா அல்லது பஞ்சாப் போன்ற தற்கொலை. சிங்கப்பூர்/மலேசியாவின் கழிவறைக்கு சமமாக தமிழகம் ஒருபோதும் மாற முடியாது வெட்கமற்ற பிச்சைக்காரன் தமிழ் தேசிய குடிமக்கள் இந்த குட்டியை தேர்தெடுக்கும் வரை திமுக/ஸ்டாலின் மற்றும் பிற திராவிடவாதிகள் கட்சிகள் , மாநிலத்திற்கு எந்த மறுமலர்ச்சியும் அல்லது இரட்சிப்பும் இருக்காது. தமிழகம் ஏற்கனவே வழக்கை விட்டு விட்டது மேற்கு வங்காளம்/கேரளா/பஞ்சாப் போன்றவை. எனவே இலவசங்களுக்காக இயங்கும் பிச்சைக்காரன் அரசைப் பற்றி பேசி பயனில்லை மற்றும் டாஸ்மாக்.

 • Sathyam - mysore,இந்தியா

  திரு.கே.அண்ணாமலை அவர்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும், தயவு செய்து திடமான பாறை போல் முன்னே செல்லுங்கள், படைப்பாளியின் ஆசிகள் உங்களுக்கு உண்டு மேலும் படைப்பாளியின் சாபம் திமுக/அதிமுகவிடம் உள்ளது. தயவுசெய்து உங்கள் சட்டக் குழுவை முழு பலத்துடன் தயார் நிலையில் வைத்திருங்கள் பேட்டரி மற்றும் மிக உயர்ந்த நிலை மற்றும் தர்க்கரீதியான முடிவுக்கு சண்டை எடுத்து. அதிமுக/பா.ம.க மற்ற திராவிடக் கட்சிகளும் தப்பவில்லை, அதிகாரத்தின் மூலம் ஆக்ரோஷமாகத் தாக்கி, தி.மு.க குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவமானப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். தயவு செய்து சில அகம் பற்றி கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு எதிராக குரைக்கும் உங்கள் கட்சிக்குள் இருக்கும் கருப்பு ஆடுகளும் நாய்களும். அவை ஒன்றும் ஸ்லீப்பியர் செல் அல்ல மற்றும் துரோகிகள். தேவைப்பட்டால், தயவுசெய்து மேலே சென்று, ரகசியமாக மஹா சுதர்சனம்/பரசுராம ஹோமம் செய்யுங்கள் நாட்டிற்குள் இருக்கும் தீய சக்திகளையும் எதிரிகளையும் அழிப்பது இப்போது மிகவும் அவசியமானது உண்மைகளை நாம் முன்பே அறிந்திருப்பதால், நமது நீதித்துறை நீதி வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம்.

 • Sathyam - mysore,இந்தியா

  வெளிப்படையாக, இந்த நச்சுத் தீமை எப்போதும் போலி மிஷனரிகளைப் புகழ்ந்து பேசும். திமுக/அதிமுகவின் தாய் அமைப்பான டிகே தான் முக்கிய காரணம். போலியான ஆரிய/திராவிடத்தின் அடிப்படையில் இந்துக்களை பிரிக்கும் வகையில் தீய மிஷனரிகளுடன் சேர்ந்து இந்த நச்சு சக்தியை பிரிட்டிஷ் ஏஜென்சி MI6 உருவாக்கியது. கோட்பாடு மற்றும் அவர்களின் முக்கிய நோக்கம் இந்து நம்பிக்கை, கோவில்கள், மரபுகள் ஆகியவற்றை அழித்து கிறிஸ்தவத்தை முழுமையாக நிலைநிறுத்துவதாகும். தெற்கில் உள்ள மாநிலம் மற்றும் திமுக/திமுக இந்தியாவை உடைக்கும் கருவிகளில் ஒன்றாகும். வெட்கமற்ற தமிழக குடிமக்களை நான் முழுமையாக குற்றம் சாட்டுகிறேன் இந்த மோசமான நிலைக்கு. இலவச மதுபானம் மற்றும் பிற பொருட்களுக்காக அவர்கள் சுய மரியாதையை இழந்து பொறுப்பாகிவிட்டனர் சோம்பேறி குடிமக்கள் மற்றும் தேசத்தின் சுமை. எவ்வளவு சீக்கிரம் பெரியாரிஸ்ட் தேசவிரோதிகள், இந்து விரோதிகள், பிரிவினைவாத தீமைகள் நச்சு சக்திகள் அகற்றப்பட்டு, தமிழகத்திற்கும் தேசத்திற்கும் அதன் மறுமலர்ச்சி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்