‛ ஹரே கிருஷ்ணா' இயக்கத்துடன் தொடர்புடைய இஸ்கான் நிறுவனத்திற்கு உலகளவில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா வெளியிட்ட வீடியோ ஒன்றில், ‛‛ இஸ்கான் இந்தியாவின் மிகப்பெரிய ஏமாற்று அமைப்பு. பசுக்கூடங்களை பராமரிக்கும் இந்த அமைப்பு, பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்திடம் இருந்து பெறுவதுடன், பல்வேறு பலன்களை பெற்று வருகிறது.
ஆந்திராவின் அனந்த்பூரில் இஸ்கான் பராமரிக்கும் பசுக்கூடத்திற்கு சென்ற போது, பால் தராத மற்றும் கன்றுகள் எதுவுமே இல்லை. அப்படியென்றால் அவை விற்கப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம். இஸ்கான், தனது மாடுகளை மாட்டிறைச்சி விற்பனையாளர்களிடம் விற்று வருகிறது. இவர்கள் மாடுகளை விற்ற அளவுக்கு வேறு யாரும் விற்றிருக்க மாட்டார்கள் '' எனக்கூறியுள்ளார்.
மறுப்பு
இதனை மறுத்துள்ள இஸ்கான் தேசிய செய்தித் தொடர்பாளர் யுதிஸ்டர் கோவிந்த தாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பசுக்கள் மற்றும் காளைகளை பாதுகாப்பதில் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவிலும் இஸ்கான் முன்னிலையில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் இரண்டையும் பராமரித்து வருகிறோம்.
குற்றச்சாட்டை போல், மாட்டிறைச்சி விற்பனையாளர்களிடம் அவைகளை விற்பது கிடையாது. அனைவராலும் அறியப்பட்டவருமான மேனகா, விலங்கின ஆர்வலரும், இஸ்கான் அமைப்பின் நலம் விரும்பியும் ஆவார். அவரது குற்றச்சாட்டு ஆச்சர்யம் அளிக்கிறது. இது ஆதாரம் அற்றது. பொய்யான குற்றச்சாட்டு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (11)
இஸ்கான் பால் தராத பசுக்களை எங்கு வைத்து பாதுகாக்கிறது என்று சொல்லட்டுமே..
ரொம்ப கேவலம்
பசுக்களை புனிதமாகக் கருதும் பக்தர்களின் மீது இப்படியொரு அபாண்டமான பழியைச் சுமத்துவதற்கு முன்பாக, பொறுப்பில் இருக்கும் இவர் சற்று சிந்தித்திருக்க வேண்டும்.
அனந்தபூர் கோசாலைக்கு இவர் வரவே இல்லை என்று தெரிகிறது. உள்ளுர் கலெக்டர், எம்பி, எம்எல்ஏ, டிஜிபி என பலரும் பலமுறை கோபூஜை செய்வதற்காகவும் இயல்பான அமைதியை நாடியும் அடிக்கடி சென்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் இஸ்கான் கோசாலை மீது நற்சான்றுகளை வழங்கியுள்ளனர். அரசியலில் ஓரங்கட்டப்பட்டுள்ள மேனகா இஸ்கானைச் சீண்டி செய்திகளில் வர விரும்புகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த அடிப்படை தெளிவு கூட இல்லாமலா இஸ்கான் போன்ற அமைப்புகள் இருக்கும்.. குறை சொல்லும் முன் யோசிக்க வேண்டும் மேனகாஜி..