Load Image
Advertisement

தி.மு.க.,வின் துணை நடிகராக வலம் வரும் கம்யூனிஸ்ட்!

Annamalai yathirai: En Mann En Makkal: A communist crawling as a supporting actor of DMK!   தி.மு.க.,வின் துணை நடிகராக வலம் வரும் கம்யூனிஸ்ட்!
ADVERTISEMENT
செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் திரண்டு, வரவேற்பு கொடுக்கும் மகிழ்வோடு, கோவையிலும் பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது. எல்லா ஊரையும் போலவே, இங்கும் மாற்றத்தை எதிர்நோக்கும் மக்கள், எங்கள் பாத யாத்திரையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

கோவை மக்களுக்காக, பிரதமர் கொண்டு வந்திருக்கும் பல பயனுள்ள நல்ல திட்டங்கள், மக்களை நேரடியாக சென்றடைந்து இருக்கின்றன. அடுத்து வரும் தேர்தல் பிரதமருக்கான தேர்தல், நாட்டின் அடுத்த பிரதமர் மோடி தான் என்பதில், கோவை மக்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.

தற்போதுள்ள அரசியல் சூழலில், அனைத்து ஊடகங்களும் ஆர்வமாக இருப்பது, எங்கள் பார்வையை அறிந்து கொள்வதே. எங்கள் இலக்கும், எங்கள் நோக்கமும், மக்களின் பார்வையையும், பாமர மக்களின் நீண்ட கால தேவைகளையும் புரிந்து கொள்வதும், அவர்களின் நிறைவேறாத கோரிக்கைகளுக்கு ஆவன செய்வது மட்டுமே.

கோவை, தமிழகத்தின் தொழில் அடையாளம். பருத்தி புடவையாய் காய்க்கும் மாவட்டம். தென்னிந்தியாவின் மான்செஸ்டரில் இல்லாத தொழில் வளங்கள் இல்லை என்னும் அளவிற்கு, 'பம்ப் செட்' முதல் ராணுவ தளவாடங்கள் வரை எல்லாம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆண்டிற்கு 25,000 கோடி ரூபாய்க்கு மேலே அன்னிய செலாவணியை ஈட்டும் ஐ.டி., பூங்காக்கள், கோவை கவுண்டம்பாளையத்தில் அமைந்து உள்ளன.

தேவையே இல்லாத கட்சி



தி.மு.க.,வின் துணை நடிகராக வலம் வருவதை தவிர, மக்களுக்கு என்று எதையும் சாதிக்காத, நாட்டிற்கு தேவையே இல்லாத கட்சி, கம்யூனிஸ்ட். 2009, 2018 என்று கோவை லோக்சபா உறுப்பினராக இருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., நடராஜன், இதுவரை ஒரு நல்ல திட்டத்தை கூட, இந்த மாவட்டத்திற்கு செய்யவில்லை.

கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, இதுவரை நம் விவசாயிகளுக்காக, இவர் என்றைக்காவது குரல் கொடுத்தது உண்டா?

கோவைக்கு பாதிப்பு



சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது, கடுமையான மின் சுமையை ஏற்றி விட்டு, இங்கே வந்து, 'டாலர் சிட்டி, டல் சிட்டி' என்று தரப்பட்ட துண்டுச் சீட்டை ஒப்பிக்கிறார், முதல்வர்.

தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது எல்லாம் கோவைக்கு பாதிப்பு வருகிறது என்பது பொருள். கடந்த 1996 - -2001 ஆட்சிக் காலத்தில் வெடிகுண்டு வெடிப்பு; 2006 - -2011ல் கடும் மின் வெட்டு.

தற்போது, ஆட்சிக்கு வந்ததும், மத்திய பாதுகாப்பு படையால் தடுக்கப்பட்ட தீவிரவாத தற்கொலைப் படையினரின் வெடிகுண்டு தாக்குதல். 50 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு.

தரமற்ற மாநிலச் சாலைகள், கோவைக்கு உரிமை பெற்ற சிறுவாணி தண்ணீர், கேரளாவால் மறுக்கப்படும் அவலம் என்று, தி.மு.க., ஆட்சி காலங்களில் எல்லாம் சிக்கல்தான். மாநிலத்தின் சாலைகள் மோசமாக இருப்பதாக, முதல்வரே வேதனை தெரிவிக்கிறார். 50 சதவீதம் கமிஷன் வாங்கும் மாநில தி.மு.க., அரசில், தீராத வேதனை மக்களுக்குதான்.

50 சதவீத கமிஷன் அரசு



* தி.மு.க., அமைச்சர்கள் வாங்கும் கமிஷன் 50 சதவீதம்

* அனைத்து திட்டங்கள், அரசு பணிகள், அனைத்திலும் கமிஷன் 50 சதவீதம்

* மக்களுக்கு சொத்து வரி உயர்வு 50 சதவீதம்

* மின் கட்டணம் உயர்வு 50 சதவீதம்

* குடிநீர் கட்டணம் உயர்வு 50 சதவீதம்

* மக்களின் நிம்மதி பறிபோனது 100 சதவீதம்

தி.மு.க.,வின் வாக்குறுதிகள் நிறைவேறியது என்னவோ, வெறும் பூஜ்ஜிய சதவீதம்.

பிரதமர் மோடி, உங்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு புரிந்தவராக, அறிந்தவராக இருக்கிறார்.

கோவை மாவட்டத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை செயல்படுத்தக்கூடிய, ஒரு முழு நேர தொண்டரை, கோவை தொகுதியில் பிரதமர் முன்னிறுத்துவார்.

தன்னலமற்ற அந்த மக்கள் பிரதிநிதிகள், தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவர். அப்படிப்பட்ட மாற்றத்தை தர, பா.ஜ.,வால் மட்டுமே முடியும்.

பயணம் தொடரும்...



வாசகர் கருத்து (31)

  • venugopal s -

    இவர் தினமும் எல்லா இடங்களிலும் போய் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டு இருக்கிறார்! அதையும் கேட்பதற்கு பத்து பைத்தியங்கள் வருகின்றனர்.

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    கம்யூனிசம், காலிஸ்தானிகள் இயக்கம், காஷ்மீர் பிரிவினைவாதிகள் இயக்கம், திக, திமுக, நாம் தமிழர் போன்றவை நாட்டின் ஒற்றுமையையும், இறையான்மையையும், எதிர்காலத்தையும் உருக்குலைக்க முயலும் பிரிவினை சக்திகள். இவை உடனே தடை செய்யப்பட்டு, இவற்றின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, தலைவர்கள் சிறையில் தள்ளப்பட வேண்டும்.

  • jayvee - chennai,இந்தியா

    துணை நடிகர்கள் அல்ல.. லைட் பாய்ஸ்..

  • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

    கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம், பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Mohan das GANDHI - PARIS,பிரான்ஸ்

    தமிழக பாஜக தலைவர் நேர்மையான படித்த தமிழன், விவசாயி thiru.அண்ணாமலை IPS தான் கண்டிப்பாக பாஜக கூட்டணிகள் பெருவாரியான 2024 MP தேர்தலில் தமிழகத்தில் ஜெயிப்பார்கள். 55 ஆண்டுகளாக இரு ஊழல் பெருச்சாளிகள் தெலுங்கன் கருணாநிதி, கன்னட அரக்கி ஜெயலலிதா A1, ஆண்டு என்ன பிரோயோஜனம்? குடிக்க நல்ல நீரில்லை, உணவுப்பொருட்கள் விலைவாசி ஏற்றம், தெருவுக்கு தெரு டாஸ்மாக் சாராய 6570 கடைகள் பார்கள் இதை யார் ஆரம்பித்தது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்