ADVERTISEMENT
தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள் இடம் பெற்று இருந்தன. இந்த கட்சிகளுடன், புதுச்சேரியில் என்.ஆர். காங்., கட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அ.தி.மு.க., நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க.,வின் முடிவு, புதுச்சேரி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை என்.ஆர். காங்., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில்கூட அ.தி.மு.க., வெற்றி பெறாததால், என்.ஆர். காங்., - பா.ஜ., இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.
நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், 'இண்டியா' கூட்டணிக்கும் நேருக்கு நேராக இருமுனை போட்டி ஏற்படும் நிலை இருந்தது. தற்போது, அ.தி.மு.க.,வின் அதிரடியால், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி, 'இண்டியா' கூட்டணி, அ.தி.மு.க., கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்போதே தேர்தல் களத்தில் அனல் பறக்க துவங்கி விட்டது.
இடியாப்ப சிக்கலில் அ.தி.மு.க.,
சவால் விடும் ஓட்டு வங்கி
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் என்.ஆர். காங்., - காங்., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. வி.சி., உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க.,வும், கம்யூ., கட்சிகள் தனி கூட்டணியாகவும், பா.ஜ., தே.மு.தி.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ம.க.,வும் போட்டியிட்டன.அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் ஓமலிங்கம் 1 லட்சத்து 36 ஆயிரம் ஓட்டுகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தளவுக்கு ஓட்டு வங்கி வைத்துள்ள அ.தி.மு.க., நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் முக்கிய சக்தியாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!