Load Image
Advertisement

தேசிய ரேங்கிங் டென்னிஸ் போட்டி 107 வீரர் - வீராங்கனையர் அசத்தல்

 National Ranking Tennis Tournament 107 Player - Player Amazing    தேசிய ரேங்கிங் டென்னிஸ் போட்டி 107 வீரர் - வீராங்கனையர் அசத்தல்
ADVERTISEMENT


சென்னை, தேசிய ரேங்கிங் டென்னிஸ் போட்டியில், 107 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்று அசத்தி வருகின்றனர்.

பிரைம் டென்னிஸ் அகாடமி சார்பில், ஏ.ஐ.டி.ஏ., தேசிய ரேங்கிங் டென்னிஸ் போட்டி, அண்ணா பல்கலை வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது.

இந்த தரவரிசை போட்டியில் தமிழகம், புதுடில்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் இருந்து, இருபாலரிலும் 107 வீரர் - வீராங்கனையர் பங்கேற்று உள்ளனர்.

இதில், யூ - 16 வயதினருக்கு மட்டும் தனிநபர் மற்றும் இரட்டையருக்கான போட்டிகள் நடக்கின்றன. நேற்றைய ஆட்டங்களில் தமிழக வீரர் - வீராங்கனையர் விளையாடினர்.

நேற்று காலை நடந்த ஆடவருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரத்யுஷ் லோகநாதன், 6 - 0, 6 - 0 என்ற கணக்கில், ரிஷிப் என்பவரையும், சாய் அங்கமுத்து, 4 - 6, 6 - 1, 6 - 2 என்ற கணக்கில் ஜோசப் தாமசையும் வீழ்த்தினர்.

நித்திக் சிவகுமார், 6 - 1, 4 - 6, 6 - 4 என்ற கணக்கில், ஜேக்கப் ஜோஷ்வாவை தோற்கடித்தார்.

பெண்களில் லுக் ஷிதா கோபிநாத், 6 - 0, 6 - 1 என்ற கணக்கில் ஹேமஜா ரெட்டியையும், தனுஸ்ரீ 7 - 5, 6 - 1 என்ற கணக்கில் நந்தினி வெங்கட சரவணனையும், லட்சுமி சஹானா, 7 - 5, 6 - 1 என்ற கணக்கில் கிருதேகா நாகராஜனையும் வீழ்த்தினர். போட்டிகள் தொடர்ந்து, 29ம் தேதி வரை நடக்கின்றன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement