ADVERTISEMENT
'இண்டியா' கூட்டணியில் சேர, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு அழைப்பு விட, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரும்பும் தகவல் வெளியாகி
உள்ளது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, 23 கட்சிகள், 63 தலைவர்கள் இணைந்த, 'இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது.
பாட்னா, பெங்களூரு, மும்பையில் நடந்த கூட்டங்களுக்கு பின், அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதி நுாற்றாண்டு விழா கூட்டம், அடுத்த மாதம், 14ம் தேதி, தி.மு.க., மகளிர் அணி சார்பில், சென்னையில் நடக்கவுள்ளது. அதற்கு சோனியா, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இருவரும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தொடர்ந்து சனாதனம் குறித்து, உதயநிதி பேசி வருகிறார்.
அதனால், கருணாநிதி நுாற்றாண்டு விழாவில் பங்கேற்றால், மேற்கு வங்கத்தில் தன் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி, மம்தா வர மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில், பா.ஜ., கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகியதை, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள வட மாநில கட்சிகள் வரவேற்றுள்ளன. 'இண்டியா கூட்டணி உடையும் என, எதிர்பார்த்த பா.ஜ.,வினருக்கு இடியாக, அவர்களின் தேசிய ஜனநாயக கூட்டணி தான் உடைகிறது' என, பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
தேசிய அளவில், பா.ஜ.,வை பொது எதிரியாக கருதுகிற மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே, இண்டியா கூட்டணியின் முக்கிய நோக்கம். அந்த அடிப்படையில், அ.தி.மு.க.,வும் இண்டியா கூட்டணியில் இடம்பெற வேண்டும் என, மம்தா விரும்புவதாக கூறப்
படுகிறது.
ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த மம்தா, சமீபத்தில் நாடு திரும்பினார். விரைவில் அவர், பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பார் என்றும், கூட்டணி வட்டாரத்தில் சொல்லப்
படுகிறது.தேசிய அளவில், இண்டியா கூட்டணியை கட்டமைப்பதில், தி.மு.க.,வுக்கு பெரும் பங்கு உண்டு என்றாலும், சனாதன எதிர்ப்பு பேச்சால், அக்கட்சிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
சோனியா, மம்தா உள்ளிட்ட, இண்டியா கூட்டணி கட்சியினரே கண்டிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில், இப்படியொரு தகவல் கிளம்பியுள்ளதால், அதற்கு காரணம் மம்தா தரப்பா அல்லது அ.தி.மு.க., சூழ்ச்சியா என்ற சந்தேகம், ஆளும் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (38)
அதிமுக திமுக ரெண்டுமே ஒரே கூட்டணி அப்பிடீன்னா அவங்க இங்கேயும் ஒரே பக்கமா சரியான முடிவு உஷல் கூட்டணியை ஒரேயடியாக சாய்க்க நல்ல நேரம்
Who are Hindus?
கூட்டணி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. - எந்தக் கூட்டணி? வதந்தி பேச தெரியுது, ஆனா என்டிஏ கூட்டணி ஊசிப்போன சட்டினி ஆயிடிச்சே என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டா பதறியடிச்சி ஓடறேள்.
ஹிந்து மத எதிரிகளான திமுகவை கூட தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் தமிழர் விரோதிகளான பாஜகவை என்றுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ரெண்டு பெரும் ஒரே கூட்டணியா அப்போ ஸ்டாலின் ஆட்சி அருமையிலும் அருமை வூசல் அற்ற ஆட்சி குடுக்கறார்ன்னு அதிமுகவும், அம்மாதான் திராவிடர்களின் உண்மையான தலைவி சமூக நீதி காத்த வீராங்கனைன்னு தி மு க வும் மேடையில் எதிரொலிப்பதை காணலாம் அதை கேட்டு கையையும் தட்டி ஓட்டையும் போட்டு சிவ சிவ தமிஷகத்தை காப்பாத்தவே முடியாது போல இருக்கு