ADVERTISEMENT
அயோத்தி: உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இக்கோவில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கோவிலின் முதல் தளத்தில் மும்முரமாக வேலை நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக.,5ல் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது.

கோவிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாதத்திற்குள் முதல்தளம் முடிந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (5)
உலகில் வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை இந்தியாவிற்கு உண்டு. இந்தியா ஒரு ஆன்மீக பூமி. காசியை மீட்டெடுத்து, கங்கையை தூய்மை செய்து, தனுஷ்கோடிக்கு பாதையமைத்து, ராமர் ஆலயம் அமைத்த அனைத்து பெருமைகளும் மோடி அவர்களையே சேரும். அடுத்து ராமேஸ்வரத்தையும் புனரமைத்து மீட்டெடுத்தால் ஆன்மீக அன்பர்கள் பயனடைவார்கள்
இன்னும் முடியாமல் எதற்கு அல்லது எப்படி தேதி கொடுக்கறாங்க, மூன்றில் இரண்டாவது தளம் டிசம்பரில் தான் முடியும் என்றால் அதற்கு மேல உள்ள மூன்றாவது தளம் பின்பு கோபுரம் எல்லாம் இருபது நாளில் முடிக்க முடியுமா?
ஜெய் ஶ்ரீ ராம். சர்வமும் கிருஷ்ணார்ப்பணம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
75 ஆண்டுகளுககு முன்பே செயயப்பட வேண்டிய சமூக ஆன்மீக மறுமர்ச்சி-அதை பஞ்ச சீலமும் அணிசேராமுறையும் மறைத்து ஏமாற்றியது-சுய மதத்தை இப்பவனும் அதை வரவேற்கும் நாடுகளும் பெருமை குன்றியதை எங்கும் காண்கிறோம். எனவே அதை கனகச்சிதமாக செய்து முடிக்கப் போகும் பா ஜ க-ராஷட்ரிய ஸ்வயம் சேவகர்களுக்கு பெருமையும கீர்த்தியும் உண்டாவதாக-அச்சாதனையில் தன்னை முனைப்படுன் ஈடுபடுத்திக் கொண்ட பிதம் மோதிக்கும் ராமனின் வமிசாவளிகளின் சிரம் தாழ்நத வாழ்த்துக்கள் ஶ்ரீ ராம ஜெயம்.