கடந்த 2019ல் பரவ துவங்கிய கோவிட் தொற்று மக்களை பாடாய் படுத்தி வந்தது. தற்போது சற்று குறைந்து, மக்கள் வாழ்க்கை நிலை சகஜமாகியுள்ளது. இந்நிலையில், கோவிட்-ஐ விட கொடிய வைரஸ் பாதிப்பு வர இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.
வாய்ப்பு அதிகம்
இது குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வர இருக்கும் தொற்று டிசிஸ் எக்ஸ் (Disease X) என்பது கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து உலகையே பயமுறுத்திக் கொண்டிருந்த கோவிட் 19 பெருந்தொற்றைக் காட்டிலும் மிக ஆபத்தான தொற்றாக இருக்கும் வாய்ப்பு அதிகம். இந்த தொற்று காரணமாக, சுமார் 5 கோடி பேர் இறக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வார்னிங்
இது குறித்து, பிரிட்டனின் கோவிட் வேக்சின் தலைவராகப் பணியாற்றிய டேம் கேட் பிங்காம் கூறுகையில், உலகில் அடுத்து ஏற்படும் தொற்று பாதிப்பால் 5 கோடி பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளது. கொரோனா தொற்றால் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதன் பாதிப்பே மிகவும் மோசமாக இருந்த நிலையில், இந்த புதிய நோய் பாதிப்பு அதை விட மோசமாக இருக்கும்.
உலக சுகாதார அமைப்பு இந்த அடுத்த தொற்றுநோயை "டிசிஸ் எக்ஸ்" (Disease X) என்று அழைக்கிறது. இப்போது 25 வைரஸ் பிரிவுகளிலும் கண்காணித்து வருகிறோம். இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று உருமாறினாலும் அது பெருந்தொற்றாக மாறும் வாய்ப்புகள் அதிகம்
5 கோடிபேர்
கடந்த 1918-19ம் ஆண்டு பரவிய ப்ளூ காய்ச்சல் காரணமாக, அப்போது சுமார் 5 கோடிப் பேர் உயிரிழந்தனர். அதற்கு இணையான பாதிப்பை இந்தப் புதுத் தொற்று ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.
மறுபுறம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்ப் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு டிசிஸ் எக்ஸ் பாதிப்பிற்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சியிலும் பிரிட்டன் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க, இப்பொழுதே தடுப்பூசிகள் தயாரிக்கும் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (16)
வைரஸ் என்னவென்றே தெரியாது, ஆனால் தடுப்பூசி கண்டுபிடிக்கணுமாம், என்னடா தில்லாலங்கடி வேலை இது, பார்மசி மபியாக்களை ஒழித்தால் மட்டுமே உலகம் உய்யும், அது இந்தியாவால் மட்டும் தான் முடியும், தற்போதைய வலிமை வாய்ந்த இந்திய அரசு இதை இந்தசதியை முறியடிக்க வல்லது
இது எங்கே இருக்கிறது? எந்த நாட்டில்? எப்போது வந்தது? எதைப்பற்றி ஏன் செய்தி இல்லை? வதந்திகளை நம்பாதீர்கள். நம்மூர் சாக்கடையில் இல்லாத கிருமிகளா? அதில்தானே பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்? வாழ்க திமுக.
வதந்தி விட பெரிய வைரஸே உலகில் இல்லை-கொரோனா மூன்றாவது அைவரை நான அநத கோவேக்ஸினையே உடலில் நுழைய விடவில்லை-முதலில் மலேரியல் ஆன்டி பாடியான் க்ளோரோகுயினின் மேம்பட்ட வடிவமான HCHQ-எனும் ஹைட்ராக்ஸி க்ளோரோ ஹைட்ரோ க்வினோன் எனும் மாத்திரையில இரண்டோ மூன்றோ உபயோகித்தேன்-அவ்வளவே-அதன் பிறகு ஒரு மாதத்தில் மதராஸ் சென்று திரும்புகையில் சிறிது குளிர் ஜூரம்போல (இன்ப்ளூயென்ஸா) வரவே வரும் வழியி் விழுப்புரத்தி் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் விழுப்புரம் நகராட்சி ரயில் நிலைய வாசலில் இலவசமாகக் கொடுத்த நிலவேம்பு கஷாயத்தை ஒன்றரை டமளர் அருந்தினேன்-ிவ்வளவுதான் போயே போச்சு ஜேம்ஸ் கொரீன் ஸிண்ட்ரோம்(1996-மத்திய அமெரிக்கா)√
கோவிட் ஐ விட ஆபத்தானதாக இருக்கலாம் .... ஆனால் திமுகவை விடவா ஆபத்தானது ??
குரோனா பரவிய போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கு சீனாதான் காரணம் என கூவினார். பாவம் அவரை பதவியிலிருந்து ஜனநாயகம் இறக்கிவிட்டது.