சென்னை: கடந்தாண்டை விட இந்தாண்டு குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைப்பதில் போலீசார் கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: போக்சோ வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்று தருவதை உறுதி செய்ய வேண்டும்.
சமூகவலைதளங்களை கண்காணித்து சாதி, மத வன்மங்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து விரைவுபடுத்த வேண்டும்.
முக்கியத்துவம்
தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் சிறப்பு ரோந்து படை மூலம் கண்காணிக்க வேண்டும்.
தமிழகம் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
கவனம் தேவை
அடுத்த ஏழு, எட்டு மாதங்களில் முக்கியமான நாட்கள், மத ரீதியிலான விழாக்கள், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளன. கடந்தாண்டை விட இந்தாண்டு குற்றங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது.
குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைப்பதில் போலீசார் கவனம் செலுத்த வேண்டும். குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன் குற்றவாளிகளை கைது செய்து விரைந்து நீதி பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து (25)
இவன் மத மோதல் என்பது ஹிந்துக்களை தண்டிப்பது என்பதே
குற்றம் குறைந்துவிட்டது. ஆனால் மணல், மைனிங் கொள்ளை அதிகரித்துவிட்டது.
அவரே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து இருக்கார் - சென்ற வருடம் குற்றங்கள் அதிகம் என்று. இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன முதல்வரே - உடன் பிறப்புகள் கடந்த ஆண்டு சாதனையை முறியடிப்பார்கள். நம்பிக்கை கொள்ளுங்கள்
செனா பானாவை பற்றி சொல்கிறாரோ?
அதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் உள்ள ரௌடிகள் எல்லோரும் பாஜகவில் சேர்ந்து இப்போது அரசியலில் பிஸியாக இருப்பது தான்!