Load Image
Advertisement

"பாஜ., அதிமுக மீண்டும் சேருவார்கள்": உதயநிதி ஜோசியம்

BJP, AIADMK to join forces again: Udayanidhis prediction   "பாஜ., அதிமுக மீண்டும் சேருவார்கள்": உதயநிதி ஜோசியம்
ADVERTISEMENT
தருமபுரி: "அதிமுக, பாஜ., கூட்டணி முறிவு என்பது நாடகம். கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் இரண்டு பேரும் ஒன்றாக வந்து ஓட்டு பிச்சை எடுப்பார்கள்" என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: இரண்டு மூன்று நாட்களாக ஒரு பிரச்னை போய் கொண்டு இருக்கிறது. கூட்டணி இருக்கா?. இல்லையா?. காலையில் இருக்கு என்று சொல்கிறார்கள். மதியம் இல்லை என்று சொல்றாங்க. இதற்கிடையே முன்னாள் அமைச்சர்கள் யாரிடமும் சொல்லாமல் திருட்டு தனமாக டில்லிக்கு போய் இருக்கிறார்கள். இது உட்கட்சி பூசல்.

திமுகவில் இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்டவை இருக்கிறது. அதேமாதிரி பாஜ.,வில் இருக்கிற ஒரு அணிதான் அதிமுக. "அதிமுக என்பதை அண்ணா திமுக என்று மக்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அதிமுக என்பது அமித்ஷா திமுக". ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி பா.ஜ.,விடம் அடகு வைக்கப்பட்டது.

அதிமுக, பாஜ., கூட்டணி முறிவு என்பது நாடகம். கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் இரண்டு பேரும் ஒன்றாக வந்து ஓட்டு பிச்சை எடுப்பார்கள். ஒருவன் திருடன் என்றால், இன்னொருவன் கொள்ளை காரன். இது தான் அதிமுகவுக்கு பாஜ.,வுக்கு இடையே உள்ள வித்தியாசம். இதை யெல்லாம் நீங்க உணர வேண்டும்.

பிரதமர் மோடி ம.பி.,யில் போய் தமிழகத்தில் வாழ்வது கருணாநிதி குடும்பம் தான் என்று பேசுகிறார். ஆமா, திமுக ஆட்சிக்கு வந்து வாழ்கிறது கருணாநிதி குடும்பம் தான். கருணாநிதி குடும்பம் என்பது ஒட்டுமொத்த தமிழகமும் சேர்ந்தது ஆகும்.

பாஜ.,ஆட்சியில் செய்த ஊழல்கள் அனைத்தும் சிஏஜி அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. துவாரகா திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு ரூ.250 கோடியை மத்திய அரசு கணக்கு காட்டி உள்ளது. இதை சொன்னது நான் கிடையாது, திமுக கிடையாது, சிஏஜி அறிக்கை சொல்கிறது. இவ்வாறு உதயநிதி பேசினார்.


வாசகர் கருத்து (48)

  • venugopal s -

    அதிமுக பாஜகவிடம் அடகு வைத்த கட்சியை மீட்காமல் விட்டதால் பாஜக அதை எப்போதோ ஏலம் விட்டு எடுத்துக் கொண்டு விட்டார்கள். எனவே உதயநிதி சொல்வது உண்மை தான்!

  • SIVA - chennai,இந்தியா

    இந்த கூட்டணி பிரிவதால் அதிக லாபம் திமுக கூட்டணி கட்சிகளுக்கே, சென்ற முறை பி ஜே பி தமிழகத்திற்குள் வந்து விடும் என்று கூட்டணி கட்சிகளை ஏமாற்றியது போல இம்முறை ஏமாற்ற முடியாது ....

  • Venkat, UAE - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    கருணாநிதி குடும்பம் என்பது ஒட்டுமொத்த தமிழகமும் சேர்ந்தது ஆகும். அப்படின்னா தமிழ் நாட்டுல உள்ள எல்லோருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் சொத்தை சொத்தை பிரித்து கொடுப்பீர்களா? ஆளுக்கு எத்தனை லட்சம் கிடைக்கும்?

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    கோமாளியின் மகனும் கோயாளியே...... கிராமத்து பழமொழி

  • Bellie Nanja Gowder - Coimbatore,இந்தியா

    ஒரு திருடன் ஒரு வீட்டில் திருடிவிட்டு ஓடும்போது மக்களை அவனை துரத்தும் பொது ஒரு சந்துக்குள் ஒழித்துவிட்டு மெதுவாக வெளியில் வந்து இவனும் மக்களின் சேர்ந்து திருடன் திருடன் என்று அவர்களுடன் சத்தம் போட்டு கொன்டே ஓடிய கதை தான் இது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்