தமிழகத்தை சேர்ந்தவர்கள் மத்திய அரசு பணிகளுக்கு அதிகமாக விண்ணப்பிங்க!: நிர்மலா சீதாராமன்
சென்னை: மத்திய அரசு பணிகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னை எழும்பூரில், நடைபெற்ற வேலைவாய்ப்பு (ரோஜ்கர் மேளா) விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக, அவர் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பணியில் சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மத்திய அரசு பணிகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பிப்பதால் காலி பணியிடங்களை நிரப்ப வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர்.
தமிழகத்தில் இருப்பவர்கள் தேர்வு எழுதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த பணிக்கு, எந்த ஊருக்கு செல்கிறோமோ அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
அங்க போனா ஹிந்தில பேச வேண்டி இருக்கும். அப்போ டார்ர்னு கிழிஞ்சுரும். சந்தி சிரிச்சுரும் .
ஒன்றிய அரசு வேலை வேண்டாம் போடா.... டாஸ்மாக் திராவிட மாடல் அரசு வேலை போதும்...
வடநாட்டுக்காரன் கடவுளை திருடுறான், உரிமையை திருடுறான், வேலையை திருடுறான்...இனி விண்ணப்பிச்சு நாங்க என்ன பண்ண போறோம்.
வெளிமாநிலத்தவர் மத்தியரசு வேலைகளில் நம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதற்கு நிர்மலாசீதாராமன் கூறுவது போல் நாம் அதிகமாக விண்ணப்பிக்காதது தான் உண்மையான காரணமா..??
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
எங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் உள்ளது, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு போனால் குவாட்டர், பிரியாணி, ரூபாய் 200 கிடைக்கின்றது. குழந்தை பிறப்பு முதல், வயதானவர்கள் இறப்புவரையில் பல இலவசங்கள் கிடைக்கின்றது. இலவச மருத்துவ காப்பீடு உள்ளது, இலவச காஸ் அடுப்பு, டி வி, மிக்ஸி, மின்விசிறி போன்ற பல இலவசங்கள் உள்ளது. நாங்கள் சுக வாழ்வு வாழ்ந்துகொண்டுள்ளோம். பிறகு ஏன் வேலை செய்யவேண்டும். அதிலும் அரசு வேலையா? அதிகம் தேவைப்பட்டால் கட்சிகளில் வட்டம், சதுரம், முக்கோணம், செவ்வகம் போன்ற ஏதாவது ஒன்றை பிடித்துக்கொண்டால் போதும் எங்களது வாழ்க்கை பல தலைமுறைகளுக்கு மிக ப்ரகாசமாகிவிடும்.