Load Image
Advertisement

கடற்கரையில் 150 டன் குப்பை அகற்றம்!

சென்னை: விநாயகர் சிலைகள் கரைப்புக்கு பின் கடற்கரையில் குவிந்த, 150 டன் குப்பை, இரண்டு நாட்களாக அகற்றப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 2,000த்திற்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது.
இந்த சிலைகளை பாலவாக்கம், திருவான்மியூர், பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதியில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

Latest Tamil News


ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட போது சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட மாலை, பூஜை பொருட்கள், மரக்கட்டைகள், வாழை இலைகள், கயிறு, உணவு, பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரையில் குவிந்தன.

இரண்டு நாட்களாக, கடற்கரை தூய்மை செய்யும் பணி நடந்தது. துாய்மை பணியில், 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், 150 டன் குப்பை அகற்றப்பட்டது.
இவை, 50 லாரிகளில் ஏற்றி குப்பை கிடங்கு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

கடற்கரையை பழைய நிலையில் துாய்மையாக்கும் வகையில், கமிஷனர் ராதாகிருஷ்ணன், திடக்கழிவு மேலாண்மை தலைமை பொறியாளர் மகேசன் ஆகியோர் கள ஆய்வு செய்து உரிய ஆலோசனை வழங்கினர்.


வாசகர் கருத்து (3)

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    இது ரொம்ப ரொம்ப தவறு, நாம் இதை சாங்கியத்திற்காக செய்யலாம். இவ்வளோ கழிவுகளை உற்பத்தி செய்ய கூடாது.

  • sankar - Nellai,இந்தியா

    பில் போடுவதற்கு இந்த கணக்கு? மக்களே இது தேவையா?

  • Saravanan - Denver,யூ.எஸ்.ஏ

    பிள்ளையாரப்பா.. மக்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பா... விநாயகனை உண்மையாக வணங்குபவனுக்கு ஞானம் வரும்.. பக்தியை ஓட்டரசியலாக்கி நாட்டை கெடுக்கிறார்கள்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement