திருப்பூரில், நேற்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
செய்யாறு விழாவில், சனாதனத்தை விமர்சித்த உதயநிதியை கண்டித்து பேசிய, ஹிந்து முன்னணி மாநில செயலர் மணலி மனோகர், ஆரணியில் வேலுார் கோட்டத் தலைவர் மகேஷ் ஆகியோரை, பயங்கரவாதிகளை கைது செய்வது போல போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை பார்க்கையில், தமிழகத்தில் கருத்து சுதந்திரம் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
இதே தமிழகத்தில் பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்தவர்கள் மீது புகார் அளித்தும் போலீசார் கண்டு கொள்ளவில்லை.
ஹிந்து கடவுள்கள், ஹிந்து மத நம்பிக்கையை புண்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்தாலும், நடவடிக்கை இல்லை.
ஆனால், விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஹிந்து விரோத தி.மு.க., அரசு, ஜனநாயகத்தை புறந்தள்ளி அடக்குமுறையை ஏவி, ஹிந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்வது கண்டனத்துக்கு உரியது.
தமிழகத்தில் எமர்ஜென்ஸி நிலை அமல்படுத்தப்பட்டதைப் போன்ற அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. கைதான நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தென்காசி, திருச்செந்துார், கும்பகோணம் என பல இடங்களில், நிர்வாகிகள் மீது வழக்குப்பதிந்து, இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளனர். இப்பிரச்னை குறித்து, ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (17)
தமிழ்நாடு/பாரதத்தில் உள்ள அனைத்து கோவில்களும் தீய திராவிட/இடதுசாரி/காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து விடுபடாத வரை இது தொடரும். RSS/VHP all நாடு முழுவதும் உள்ள பிற இந்து அமைப்பினர் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் மிகவும் தீவிரமாகவும், சட்டரீதியாகவும் வழக்கை எதிர்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
ஏன் நீ இன்னும் வெளியிலா இருக்க, ஒருத்தன் UNCONDITIONAL ஆஹ் மன்னிப்பு கேட்டும் விடலை...............
இதற்கு ஒரே வழி தமிழக அரசை எதிர்த்து வழக்கு போடுவதுதான. அதுவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுவது நல்லது. இந்து மதத்தை இழிவுபடுத்தியும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வரும் உதயநிதி, ஆ.ராசா போன்றோர் மீது இதுவரை போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களை எதிர்த்து கண்டனம் தெரிவித்தவர்கள் மேல் போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது.
இந்தியா முழுதும் சிறுபான்மையினர் மத அழிப்பு, எதிர்காட்சிகள் ஒழிப்பு என நடத்தும் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாத உங்கள் சர்வாதிகார தலைமைக்கு எடுத்து சொல்லுங்கள்
சாத்தானை தானே ஏவிவிடுவார்கள் இவர் ஏன்னா போலீஸ்யை ஏவிவிடுவாங்க என்று சொல்கிறார் ...