Load Image
Advertisement

10 புலிகள் பலி: தேசிய பாதுகாப்பு ஆணைய குழு நீலகிரியில் விசாரணை

 10 tigers killed: National Security Commission team probes Nilgiris    10 புலிகள் பலி: தேசிய பாதுகாப்பு ஆணைய குழு நீலகிரியில் விசாரணை
ADVERTISEMENT
நீலகிரி மாவட்டத்தில் கடந்த, 40 நாட்களில், 10 புலிகள் இறந்த விவகாரம் தொடர்பாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் கள ஆய்வு செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த, 40 நாட்களில், சிறியூர், கார்குடி, முதுமலை, நடுவட்டம், அவலாஞ்சி, சின்ன குன்னுார் பகுதிகளில், ஆறு குட்டிப்புலிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், புலிகள் இறப்பு குறித்து நேரில் கள ஆய்வு செய்து விசாரணை நடத்த, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின், கர்நாடக மாநிலம் பெங்களூரு அலுவலக ஐ.ஜி., முரளி குமார், இந்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு சென்னை தலைமையிட துணை இயக்குனர் கிருபா சங்கர், இந்திய வன உயிரின நிறுவன ஆய்வாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் நேற்று காலை ஊட்டிக்கு வந்தனர்.

ஊட்டி கால்ப் கிளப் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், காலை, 10:00 மணி முதல், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர் அருண் குமார், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உட்பட வனத்துறையினரிடம், 10 புலிகள் இறப்பு குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, 11:00 மணிக்கு, ஊட்டி அருகே சின்ன குன்னுார் பகுதியில் கடந்த, 19ம் தேதி நான்கு புலிக்குட்டிகள் உயிரிழந்த பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

அவற்றின் தாய் புலியை தேடும் பகுதிகள் குறித்து வன ஊழியர்களின் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, மதியம், செப்., 9ம் தேதி எமரால்டு பகுதியில், இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட இடத்திலும் கள ஆய்வு செய்து, அங்கு பணியில் இருந்த வன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இரவு, 7:20 மணிக்கு ஊட்டிக்கு வந்த அவர்கள், புலிகள் இறப்பு குறித்த வனத்துறை அதிகாரிகளின் அறிக்கைளை ஆய்வு செய்த பின் சென்றனர்.

பத்திரிகையாளர்களை ஏன் தவிர்க்க வேண்டும்?



ஊட்டிக்கு நேற்று வந்த ஆணைய குழுவினர், நேற்று பத்திரிகையாளர்களை சந்திக்காமல், அவர்களின் கேள்விகளுக்கு பதில் ஏதும் அளிக்காமல், தவிர்த்து சென்றது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


நீலகிரியில், முதுமலையை தவிர, சீகூர் கோட்டம் உட்பட பிற பகுதிகளில் உள்ள வனங்களில் வாழும் புலிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்த குழுவினர், 'மவுனம்' அதை ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளூர் வன உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

- நமது நிருபர் --



வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    இவிங்க சொல்ற தகவல்களையே அவிங்க துப்பறிஞ்சதா சொல்லி அறிக்கை குடுத்துருவாங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்