Load Image
Advertisement

தானியங்கி டிரைவிங் டெஸ்ட் மையத்திற்கு... பரிந்துரை; மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி அதிரடி

Referral to Automated Driving Test Center... Central Road Safety Committee Action   தானியங்கி டிரைவிங் டெஸ்ட் மையத்திற்கு... பரிந்துரை; மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி அதிரடி
ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரியில், தனியங்கி 'டிரைவிங் டெஸ்ட்' கொண்டுவர மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளால், ஆண்டுதோறும் லட்சணக்கானோர் பலியாகின்றனர். இதனை குறைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டியின் கீழ், மாநில அளவிலும் சாலை பாதுகாப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியிலும் இக்கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டியினர் கடந்த பிப்ரவரி மாதம், புதுச்சேரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பேரில், மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டியினர் நேற்று காணொளி மூலம் புதுச்சேரி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.

கூட்டத்தில் தலைமை செயலர் ராஜிவ் வர்மா, நிதித் துறை செயலர் ஜவகர், போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா, பொதுப்பணித் துறை செயலர் மணிகண்டன், போக்குவரத்து இயக்குநர் சிவக்குமார், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டியின் தலைவரான அபய் மனோகர் சப்ரே, புதுச்சேரியின் நடந்த சாலை விபத்துகளை பட்டியலிட்டு ஆலோ சனை வழங்கினார்.

தொடர்ந்து, மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டியினர், புதுச்சேரிக்கு வழங்கிய ஆலோசனை வருமாறு:

கடந்தாண்டு புதுச்சேரியில் சாலை விபத்துகளில் 140 பேர் இறந்துள்ள நிலை யில், இந்தாண்டு இதுவரை 80 பேர் இறந்துள்ளனர். விபத்துகள் குறைந்துள்ள போதிலும், சாலைகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். குறிப்பாக கிராமப்புற சாலைகளை போட வேண்டும்.

பெரும்பாலான சாலை விபத்துகள் ெஹல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவதால் ஏற்படுகிறது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், தேசிய நெடுஞ்சாலைகளில் ெஹல்மெட் அணியாமல் அதிவேகமாக பறப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் ெஹல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் விபத்துகளை குறைக்க முடியும்.

தற்போதுள்ள 'மேனுவல் டிரைவிங் டெஸ்ட்'டிற்கு பதிலாக, 'ஆட்டோமெட்டிக் டிரைவிங் டெஸ்ட்' கொண்டு வர வேண்டும். சென்சார் மூலம் இயங்கும் இந்த டிரைவிங் டெஸ்ட் துல்லியமாக டிரைவர்களின் திறமை சோதிப்பதோடு, விரைவாக டிரைவிங் லைசென்ஸ் தர முடியும்.

புதுச்சேரியில் நடைபாதை, சாலைகளை ஆக்கிரமித்து, வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், சாலை குறுகி விடுவதோடு, பாதசாரிகளும் நடக்க முடியவில்லை. இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை - உட்புற சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்புகளில், திடீரென வாகனங்கள் உள்ளே புகுவதால், விபத்துகள் அதிகரிக்கிறது.

எனவே தேசிய, மாநில சாலை சந்திப்புகளில் உள்புற சாலைகளில் 'ராம்பல் ஷிப்ட்' எனப்படும், அதிர்வினை ஏற்படுத்தும் வேகத்தடைகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் இதனை ஏற்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement