பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் இன்று, 'பந்த்' நடத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முடங்கியதால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
உச்ச நீதிமன்றம்
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. தமிழகத்துக்கு அடுத்த, 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு, 5,000 கன அடி நீர் திறந்து விடும்படி, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு,உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
முன்னெச்சரிக்கையாக பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து, கலெக்டர் தயானந்தா உத்தரவிட்டுள்ளார். இன்று நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முடங்கியது
இருந்தாலும், பல பகுதிகளில் பஸ்கள், ஆட்டோ, கால் டாக்ஸி போக்குவரத்து முடங்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்ல உள்ள சுமார் 430 பஸ்கள் ஒசூர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் விவசாய சங்கங்களின் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது.
மேலும், அங்குள்ள ராமநகரில் கர்நாடக பாதுகாப்பு வேதிகே என்ற அமைப்பு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்து அதற்கு படையலிட்டு நூதன போராட்டம் நடத்தப்பட்டது. சில இடங்களில் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்ட விவசாயிகளில் ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வாசகர் கருத்து (35)
தண்ணீர் லிட்டர் 20 ரூபாய்க்கு விற்கும் காலம். ஒப்பந்தம், ஆணையம், நீதிமன்றம் வெளியே காங்கிரஸ், திமுக, பிஜேபி ஒரு தீர்வு தெரியவில்லை? பெங்களூர் பெரிதும் விரிவடைந்து வருகிறது. குடிநீர் தேவை அதிகரிக்கும். மாநில பிரிவுக்கு பின், தன் தேவையை தானே பூர்த்தி செய்ய வேண்டும். மணல் அள்ளும்போது / காவிரி வழி தட விவசாய பொருள் விற்பனையின் போது அடக்கவிலையில் கர்நாடக மக்களுக்கு தமிழகம் விற்பனை செய்ய முன் வந்து இருக்க வேண்டும். தமிழக சில ஆற்று நீர் இணைக்கப்பட்டு சேமிக்க முடியும்.
இந்திய ஒருமைப்பாடு எங்கே இருக்கு?? அப்பட்டமா கோர்ட்டு உத்தரவை, ஆணைய உத்தரவை கர்நாடகா மீறிக்கிட்டே இருக்கு ...... கேட்க ஆளில்லை .....
இதுல இவனுக புள்ளி கூட்டணி பாரத்தை காப்பாத்த போறாங்களாம். திருட்டு திமுக ராசி இங்கு போதிய மழை இல்லை இதில் இவனுக சநாதனத்தை அழிக்க போறாங்களாம். இவனுங்களுக்கு வோட்டு போட்ட டெல்டா மக்களை சொல்லணும்
பல ஆண்டுகளாக நானும் கவனித்துக்கொண்டு தான் வருகிறேன்... கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் திமுகவும் ஆட்சிக்கு வரும்போது தான் இந்த காவிரி பிரச்சினை வருகிறது. என்ன காரணம்? இதில் இவர்கள் கூட்டணி வேறு
திருட்டு திமுக அரசின் படு தோல்வி ... தண்ணி வாங்க வழி தெரியலை .. எப்போவும் அடுத்த மாநிலத்திடம் தண்ணீருக்காக பிச்சை...