Load Image
Advertisement

தமிழகத்தின் சிறந்த சுற்றுலா கிராமம் உல்லாடா: மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவிப்பு

Ullada is the best tourist village in Tamil Nadu: Union Ministry of Tourism announced    தமிழகத்தின் சிறந்த சுற்றுலா கிராமம் உல்லாடா: மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவிப்பு
ADVERTISEMENT
ஊட்டி,--தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேர்ந்தெடுக்க, மத்திய சுற்றுலா அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீலகிரி மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழகம், ஊட்டி அருகே உல்லாடா கிராமத்தை தேர்வு செய்து, மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு அனுப்பியது.

பல்வேறு மாநிலங்களிலிருந்து, 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதில், 2023ம் ஆண்டுக்கான, சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விருது, டில்லியில், நாளை வழங்கப்படுகிறது. விருது பெறுவதற்காக உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையில் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், கக்கமல்லன், ராஜேஷ், வினோத் ஆகியோர் டில்லி சென்று உள்ளனர்.

மலைச்சொல் கலை இயக்க சமூக மையம் அமைப்பாளர், வக்கீல் பாலநந்தகுமார் கூறுகையில், 'உல்லாடா கிராமத்தை, சிறந்த சுற்றுலா கிராமமாக, மத்திய சுற்றுலா அமைச்சகம் தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்தால், பல கிராமங்களின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு உள்ளது' என்றனர்.


வாசகர் கருத்து (2)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அவ்வளவு தான் 'G" Squire. க்ராமத்தை வளைத்து போட்டு மக்கலிய்ய விரட்டி காசாக்கி விடும்

  • Swaminathan - Srirangam ,இந்தியா

    No convenience for elders transport to this village. Government should give awards after making proper easy transportation

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement