Load Image
Advertisement

நீதிமன்றத்தில் அரசியல் வேண்டாம்: பழனிசாமி வழக்கில் கோர்ட் கருத்து

 No politics in court, Court opinion in Palaniswami case    நீதிமன்றத்தில் அரசியல் வேண்டாம்:  பழனிசாமி வழக்கில் கோர்ட் கருத்து
ADVERTISEMENT
புதுடில்லி-தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி மீதான, 'டெண்டர்' முறைகேடு வழக்கு விசாரணையை, அடுத்த மாதம் 17க்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரிய விவகாரத்தில், 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை நீதிபதிகள் அனிருந்தா போஸ், பேலா எம்.திரிவேதி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மனு மீதான விசாரணை செப்., 25க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தவே வாதிட்டதாவது:

எதிர்க்கட்சிகள் ஊழல் வழக்குகளை சந்திப்பது நாடு முழுதும் நடந்து வரக்கூடியது தான். தற்போது எதிர்க்கட்சியாக இருப்பவர்கள், ஆட்சியில் இருந்தபோது என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டனர் என்பதை அலசி ஆராய்வது, ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களின் அடிப்படைக்கடமையாக உள்ளது.

அதன் அடிப்படையிலேயே பழனிசாமி மீது விசாரணையை துவங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதற்கு பழனிசாமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசியல் விவகாரங்களை நீதிமன்றத்தில் இருந்து தள்ளி வையுங்கள். நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வழக்குகளை எதிர்கொள்கின்றனர். ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை சந்திப்பதில்லை. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து (3)

  • duruvasar - indraprastham,இந்தியா

    கோர்ட்டில் வழக்கு வந்தபோது தனக்கு கோவிட் இருப்பதால் வயதான காலத்தில் தனிமையில் இருப்பதாக கூறி கோர்ட்க்கு செல்லாமல் தட்டிகழித்தவர்தான் ஆலந்தூர் பிச்சைப்ப முதலியார்.

  • ஆரூர் ரங் -

    ஆனா யுவர் ஆனர். திமுக முறைகேடுகளை அமலாக்கத்துறை விசாரித்தால் மட்டும் இதே அரசுக்கு🙁 ஆத்திரம் வருது. கோர்ட் பிஜேபி பிடியில் இருப்பதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டால் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லையே.ஏன்?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    புது மாடல் உத்தரவாக இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்