ADVERTISEMENT
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எடுத்துள்ள முடிவு, தி.மு.க.,வுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
எக்காரணம் கொண்டும் பா.ஜ., கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகாது என்றுதான், தி.மு.க., தலைமை நம்பியது. அதனால்தான், கூட்டணி கட்சிகளுக்கு, ஏற்கனவே கொடுத்த இடங்களை விட குறைத்துக் கொடுக்கலாம் என, முடிவெடுத்திருந்தது. ஆனால், பா.ஜ.,வை விட்டு அ.தி.மு.க., விலகி இருக்கும் சூழலில், அக்கட்சி, தமிழகத்தில் தன் தலைமையில் புதிய கூட்டணியை கட்டமைக்க முயலும்.
பா.ஜ.,வோடு கூட்டணியில் இருந்ததாலேயே, சித்தாந்த ரீதியில் அ.தி.மு.க.,வை, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்,- விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட, பல கட்சிகள் தள்ளி வைத்திருந்தன. இனி, அந்த நெருடல், அந்த கட்சிகளுக்கு இருக்காது.
அதனால், தொகுதி பங்கீட்டில் தி.மு.க., ஏற்கனவே திட்டமிட்டபடி, இனி நடக்க முடியாத நிலை வந்துள்ளது. எண்ணிக்கையை குறைத்தால், சில கட்சிகள் அந்த பக்கம் தாவ வாய்ப்பு அதிகம்.
அந்த அடிப்படையில் பார்த்தால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு, திடீர் அரசியல் முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இதுநாள் வரை, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால், சிறுபான்மையினர் ஓட்டுக்கள், தி.மு.க., அணிக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைத்தன.
பா.ஜ.,வோடு உறவு வைத்ததால், சிறுபான்மை மக்களும், அ.தி.மு.க.,வை ஒதுக்கி வைத்திருந்தனர். தற்போது, அவர்களுக்கு அந்த தடை இல்லை. அ.தி.மு.க., கூட்டணியை ஆதரிக்க வழி திறந்திருக்கிறது.
இதையெல்லாம் உணர்ந்துதான், தி.மு.க., நேற்றே, அவசரமாக கூட்டணி பேச்சை தொடங்கிவிட்டது. இந்த திருப்பம் பல விதங்களிலும் தி.மு.க.,வுக்கு சாதகமற்ற சூழலை உருவாக்கி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.- - நமது நிருபர் --
வாசகர் கருத்து (14)
இந்த அதிமுக, பாஜக கூட்டணி முறிவால், எல்லா ஹிந்துக்கங்களும் இனி பாஜக பக்கம்தான். இந்த இரண்டு தீரா விஷத்திற்கும் மக்கள் பாடம் கற்பிக்க ஒரே தீர்வு பாஜக.
ஆக கூட்டிப்பார்த்தால் 45 தொகுதி வருதே.....சின்ன ஸ்டாலினை கூப்பிடுங்கள்....
கற்பனை கதை போல் தெரிகிறது
மத்தளத்திற்க்கு இரண்டு பக்கமும் அடி என்றால் இப்போது மத்தளம் வாசிப்பவருக்கு நாலா பக்கத்திலும் அடிமட்டுமல்ல இடியும் கூட.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்கோவில் மழை பெய்தால் திமுகவுக்கு சளி.