Load Image
Advertisement

ஆகம கோயில்களில் அர்ச்சகர் நியமனம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Appointing priest in Agama temples: Supreme Court order to Tamil Nadu Govt   ஆகம கோயில்களில் அர்ச்சகர் நியமனம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ADVERTISEMENT
புதுடில்லி,-ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களில், ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்கள் மற்றும் ஆகமம் தொடர்பான பணியாளர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணியாற்றும் வகையில், சில நியமனங்களை செய்ய அரசு முற்பட்டபோது, அக்., 2021ல், டி.ஆர்.ரமேஷ் தொடுத்த வழக்கில், ஆகம கோவில்களில் ஆகம விதிப்படியே நியமனங்கள் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அந்த இடைக்கால உத்தரவே, ஆக., 2022ல், இறுதி உத்தரவாக வந்தது. மேலும், அந்த உத்தரவில், கோவில்களில், பணி நியமனங்களை, அறங்காவலர்கள் அல்லது தக்கார் மட்டுமே செய்யலாம்; அறநிலையத் துறை செய்யக் கூடாது.

ஒரு மாதத்திற்குள், ஆகம கோவில்களைக் கண்டறிய, ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைத்து, அதில் இரண்டாம் நபராக, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமியை நியமித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இருவரை அரசு நியமனம் செய்யலாம் என்றும் கூறியது.

ஓராண்டு கழித்து, அரசு தரப்பில், சக்திவேல் முருகன் என்பவர் பரிந்துரைக்கப்பட்டார். இதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதுவரை ஆகம கமிட்டி இறுதி செய்யப்படவில்லை. இதைப் பயன்படுத்தி, அறநிலையத் துறை சில கோவில்களில் தொடங்கப்பட்ட புதிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்களை, கோவில்களில் நேரடி பயிற்சி கொடுப்பதற்கும், நியமனம் செய்வதற்கும் தமிழக அரசு முற்பட்டது.

'இவையெல்லாம் ஆகம விரோதங்கள்' என்று, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், 'கோவில்களில் தற்போதுஉள்ள நிலையே தொடர வேண்டும். ஆகமங்களை மீறி, புதிய நியமனங்களையோ, இட மாற்ற உத்தரவுகளையோ பிறப்பிக்கக் கூடாது' என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், இதுகுறித்து மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படியும், தமிழக அரசின் அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


வாசகர் கருத்து (15)

  • K V Ramadoss - Chennai,இந்தியா

    நீ என்ன படைத்தா லும், வீம்பு, விதண்டாவாதம், இல்லாமல், முழு பக்தியுடன் படைத்தால் ஆண்டவன் ஏற்றுக்கொள்வார். கண்ணப்ப நாயனார் படைத்த மாமிசத்தை சிவனார் ஏற்று்க்கொள்ளவில்லையா ? ஆனால் கண்ணப்பர் ஏட்டிக்கு போட்டியாக செய்யவிலலை. எளிமையுடன் முழு அன்புடன் படைத்தார். அந்த கலப்படமில்லாத பக்தி வேண்டும். Exceptions cannot be a rule. வாதம் செய்பவர்கள் ஆண்டவனிடம் அக்கரையுடனும் பக்தியுடனுமா செய்கிறார்கள் ? எதற்கும் ஒழுங்கும் 1ட்டுப்பாடும் தேவை.

  • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

    என்ன கொட்டினாலும் திமுகவிற்கு புத்தி வராது

  • Godyes - Chennai,இந்தியா

    இறைவன் குரு நிலை உடையவன்.அவனை அர்ச்சித்து அருளை பெற நாக்கில் குரு அதாவது வாக்கு ஸ்தானத்தில் குரு அமரும் பாக்கியம் உள்ளவர்களே அர்ச்சகராக முடியும். அதுவன்றி வாக்கில் சனி உள்ளவர்கள் அர்ச்சித்தால் நாடு பாழாகும்.

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    இந்துக்களை இறைப்பணி செய்யவிடாமலும் கனகசபை ஏற கூடாது என்ற இந்து விரோத சக்திகளுக்கு இந்துக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று மக்கள் கூறுகின்றனர்

  • vbs manian - hyderabad,இந்தியா

    உச்ச நீதிமன்றம் உயர் நீதி மன்றம் எல்லாம் கு ட்டுக்கு மேல் கு ட்டு வைக்கின்றன. எங்கேயோ என்னை மழை பெயர்கிறது என்று கழ் கம் நினைக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்