இக்கூட்டத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம் என பல நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தலின்போது கூட்டணி பற்றி பார்த்துக்கொள்ளலாம், இப்போதைக்கு பா.ஜ., வேண்டாம் என ஒருசிலர் கூறியுள்ளதாக தெரிகிறது. பின்னர் பேசிய பழனிசாமி, 'மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் அடிப்படையில் பா.ஜ., கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்' எனப் பேசியதாக தகவல் வெளியானது.
இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும், பா.ஜ., உடனான கூட்டணியில் இருந்தும் விலகி கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு நடுவே, வெளியே வந்த மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், கூட்டணி இல்லை என சைகை காட்டியபோது, அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பி, பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
பாஜ.,வுடன் கூட்டணியில் இல்லை என்று அறிவித்த சில மணி துளிகளில் '#நன்றி...மீண்டும் வராதீர்கள்' என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. அதிமுக தொண்டர்கள் பாஜ.,வுக்கு எதிராகவும், அ.தி.மு.க ஆதரவாகவும் கருத்துகளை பகிரந்து வருகின்றனர். இந்திய அளவில் பேசும்பொருளாக மாறியுள்ள இந்த விவகாரம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பாராளுமன்ற தேர்தலின் போது, பாஜ.,வுக்கு பெரும் பின்னடைவாக இது இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (174)
மோடி அண்ணாமலை போன்ற காட்டுமிராண்டிகளை தமிழகத்தை விட்டு விரட்டிவிட்டார்கள் . அடுத்த அத்தேர்தலில் இந்தியாவை விட்டு விரட்டப்படுவார்கள் .
இது நாடகமாக இருக்க வாய்ப்புள்ளது, அண்ணா தி மு க /பி ஜே பி பிரிந்தவுடன் , தி மு க வில் இருந்து பிரிந்து வி சி க , கம்னிஸ்ட்டுகல் பி ஜே பி இல்லாத அண்ணா தி மு க வில் சேரும் பின் , தேர்தல் நேரத்தில் அண்ணா தி மு க பி ஜே பி யில் சேரும், அதை எதிர்பார்க்காத விசிக, கம்னிஸ்டுகள், அண்ணா தி மு கவிலிருந்து விலகும், தி மு க வில் சீட்டு கொடுத்து முடிந்து விடும் , பின் வி சி க, கம்னிஸ்டுகள் தி முகவில் இனைய வாய்ப்பில்லாமல் போகலாம், இது அண்ணா தி மு க பி ஜே பி சாதகமாக இருக்கலாம் -நல்லவன்
நன்றி மீண்டும் வராதீர்கள் என்ற அதிமுகவோட ஹேஷ்டேக் நல்லாருக்கே யார் கொடுத்தது இந்த ஐடியாவை ம்ம்..அதுவந்து.. அதுவந்து முந்தா நேத்து டெல்லிக்கு போயி பாஜக தலைவர் நட்டாவை பாத்துட்டு கிளம்பும் போது அவர் சொன்னது.😆
பிஜேபி ரொம்ப நல்லவர்கள் போல் பேசிக்கிறான்கள்.
EPS 2016 மறந்துடுச்சா. டில்லிக்கு உன் கட்சி ஓடுச்சா ஆட்சிய காப்பாத்திக்க இல்ல மோடிஜீ தமிழகம் வந்தாரா? ஒழிஞ்சி தொலைங்க