வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமயைிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.தி.மு.க., விலகுவதாக இன்று நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக மூத்த நிர்வாகி கே.பி .முனுசாமி அறிவித்தார். இதையடுத்து கூட்டணி முறிவு உறுதியாகியுள்ளது.
டிரெண்ட்டாக வரும் ஹே ஷ்டேக்
பா.ஜ.,அ.தி.மு.க., கூட்டணி முறிவை வரவேற்று அ.தி.மு.க., வினர் 'நன்றி மீண்டும் வராதீர் ' என ஹேஷ் டேக் செய்து வருகின்றனர். இது டிரெண்ட்டாக வருகிறது.
வாசகர் கருத்து (52)
காதலி ப்ரேக் அப் சொன்ன பிறகும் காதலன் அதை ஏற்றுக் கொள்ளாமல் அதுபற்றி என் அப்பா தான் முடிவு செய்வார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அதைவிட அபத்தமாக இருக்கிறது அண்ணாமலை அவர்களின் அறிக்கை!
இவர் ஒரு டப்பாங்குத்து பொம்மை என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார்
அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு இவர்தான் காரணம். இவரோட வாய்தான் காரணம். ஆனால் இதுக்கு மேல தலைமை முடிவு செய்யுமாம். 'கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி'.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டு அரசியல் , தமிழக மக்கள் வாக்கு வாங்கி புதிரானது. அதிகமான கோயில்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இங்கே பி ஜே பி தனியாக ஒரு சீட்டு கூட வாங்க முடியவில்லை. அண்ணாமலை அரசியலுக்கு ஒரு கத்துக்குட்டி. இவரை பி ஜே பி தமிழ்நாட்டின் தலைவராக நியமித்தது ஒரு அரசியல் பிழை. இவரை நீக்கினால் ஐவரும் அமர் பிரசாத் ரெட்டியும் தனி கட்சி துவங்குவார்கள். இப்போது இவர்கள் இரண்டு பேரினால்தான் கட்சிக்கு உழைத்த மூத்த தலைவர்கள் ஒதுங்கி ஒதுக்கி வைக்க பட்டு இருக்கிறார்கள். அண்ணாமலை வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டு இருக்கிறார். தினமும் விளம்பரம் தேடி கொள்கிறார். பி ஜே பி தேசிய தலைமைக்கு தமீழநாடு இப்போது ஒரு பொருட்டே அல்ல அல்ல. அவர்களுக்கு இந்த 40 சீட் பற்றி கவலை இல்லை. திமுக அதிமுகவுடன் சவாரி செய்ய வேண்டும் தேவை இல்லை. அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தார்கள் முடியவில்லை அண்ணாமலை பி ஜே பி என்ற கட்சியை அழித்து கொண்டு இருக்கிறார்.
அதிமுகவில் இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளார்களாம் ஒரு தொண்டருக்கு சுமார் இரண்டு ஓட்டுகள் என்றால் நான்கு கோடி ஓட்டுகள் வாங்கி ஆட்சி அமைக்க வில்லை ஏன் தமிழ் நாட்டில் உள்ள மக்கள் தொகை சுமார் எட்டு கோடியில் நான்கு கோடி ஓட்டுகள் 50 பெற்று ஆட்சி அமைக்க வில்லை ஏன்