Load Image
Advertisement

செப்.25: இன்று 492வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இன்று (செப்.25), பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாயின.
Latest Tamil News

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.

பின், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு(2022) மே-21-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்
Latest Tamil News
அதனை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று (செப்.25) 492-வது நாளாக பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகின்றது.


வாசகர் கருத்து (2)

  • Vathsan - மும்பை,இந்தியா

    45 rupees worth of petrol is sold for 100+ rupees. Howlong this robbery will continue?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்