ADVERTISEMENT
சென்னை,--தமிழகத்தில், 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றிலும் வேகமாறுபாடு உள்ளது.
அதனால், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழக தென்மாவட்ட கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, 27, 28ம் தேதிகளில் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!