Load Image
Advertisement

டேனிஷ் அலி மீது நடவடிக்கை: பா.ஜ., - எம்.பி., கிஷன் கடிதம்

 Action against Danish Ali BJP, - MP, Kishan letter    டேனிஷ் அலி மீது நடவடிக்கை: பா.ஜ., - எம்.பி., கிஷன் கடிதம்
ADVERTISEMENT
புதுடில்லி,-பகுஜன் சமாஜ் எம்.பி., டேனிஷ் அலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, மற்றொரு பா.ஜ., - எம்.பி., ரவி கிஷன் சுக்லா கடிதம் எழுதி உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில், லோக்சபாவில் பேசிய பா.ஜ., - எம்.பி., ரமேஷ் பிதுாரி, பகுஜன் சமாஜ் எம்.பி., டேனிஷ் அலியை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்துள்ளது.

டேனிஷ் அலிக்கு ஆதரவு தெரிவித்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'ரமேஷ் பிதுாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தின. ஜார்க்கண்டைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, ரமேஷ் பிதுாரியை தரக்குறைவாக பேசிய டேனிஷ் அலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், மற்றொரு பா.ஜ., - எம்.பி.,யான ரவி கிஷன் சுக்லாவும், டேனிஷ் அலி மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

டேனிஷ் அலிக்கு எதிராக ரமேஷ் பிதுாரி பேசிய கருத்துக்கள் எந்த வகையிலும் ஏற்க முடியாதவை. இருப்பினும், அவரை பேசவிடாமல் டேனிஷ் அலி தொடர்ச்சியாக கூச்சல் எழுப்பி இடையூறு செய்ததால்தான், சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரமேஷ் பிதுாரி தெரிவித்தார்.

டேனிஷ் அலி இது போல் நடந்துகொள்வது புதிதல்ல. இவர், பார்லிமென்டில் எனக்கு எதிராக இரண்டு முறை சபைக்குறிப்புக்கு அப்பாற்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (18)

  • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

    நம்ம நிதி மேல் என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    பிரதமரை பற்றி அவதூறாக பேசுன விசயம் வெளியே வந்தவுடனே தக்காளி எல்லா போக்கிரி கும்பலும் சைலண்ட்டாயிடிச்சு. அதுவர எதோ பிஜேபி MP மட்டும் தான் அசிங்கமா பேசிட்டாருங்கறத போல என்ன மாதிரியான ட்ராமாவெல்லாம் போட்டுருந்தாங்க?

  • பேசும் தமிழன் -

    ஒருவருக்கு பேச வாய்ப்பு கொடுத்து இருக்கும் போது...அதில் அடுத்தவர் குறுக்கிட கூடாது என்ற சபை நாகரீகம் கூட தெரியாதவரா அந்த அலி ???? அவர் வேண்டுமென்றே செய்தது போல் தான் தெரிகிறது!!!

  • hariharan -

    வரவர பாராளுமன்றத்தில் நாவடக்கம் என்பதே இல்லை. ஒருவர் எழுந்து நின்று பேசும்பொழுது மற்றவர்கள் கண்ணியமாக இருக்கவேண்டும். கடமையாற்றுவதில் கண்ணியமும் கட்டுப்பாடும் வேண்டும் எ எதோ திராவிட தலைவர் கூறியதாக நினைவு.

  • Ravi Devaraj - హైదరాబాద్ ,இந்தியா

    நல்ல வளர்ப்பு பாராளுமன்றத்தில் வெளிப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்